Pondicherry

News February 5, 2025

தற்கொலை முயற்சி செய்த முதியவரை காப்பாற்றிய ஐஜி

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் ஐஜி அஜித்குமார் சிங்லா இன்று மாலை நடை பயிற்சி மேற்கொண்டார். அப்போது சந்திரகுமார் (74) என்கிற முதியவர் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதனை கவனித்த ஐஜி முதியவரை சமயோசிதமாக செயல்பட்டு அவரது உயிரை காற்றியுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 5, 2025

புதுச்சேரியில் போலீசார் ஆயுத படைக்கு மாற்றம்

image

புதுச்சேரி டிஐஜி சத்திய சுந்தரத்தின் நண்பர்களிடம் வலுக்கட்டாயமாக அபராதம் கொடுக்க வேண்டும் என்று தகராறு செய்து அத்துமீறியதாக கூறப்பட்ட கிருமாம்பாக்கம் போலீஸ் நிலைய ஏட்டுகள் ஞானமூர்த்தி, திவித்ரசன், நவீன் காந்த் மற்றும் போலீசார் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆகியோர் அதிரடியாக ஆயுத படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. சுபம் கோஷ் இன்று பிறப்பித்துள்ளார்.

News February 5, 2025

புதுச்சேரியில் வாகன எண்கள் ஏலம்

image

புதுகை போக்குவரத்துத்துறை நேற்று வெளியிட்ட செய்திகுறிப்பில், புதுவை போக்குவரத்துத் துறையின் PY-02 ஒய் (காரைக்கால்) வரிசையில் உள்ள எண்கள், போக்குவரத்து இணையதளத்தில் வரும் 11ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்படவுள்ளது. ஏலத்தில் தேவையான பெயர், கடவுச் சொல்லை அதே இணையதளத்தில் பிப்.05 முதல் 10ஆம் தேதி வரை பதிவு செய்து  கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 4, 2025

‘U’ வடிவ வடிகால் அமைக்கும் பணி: முதல்வர்

image

புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், புதுச்சேரி – கடலுார் சாலை காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் பெட்ரோல் பங்க் வரை 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் ‘U’ வடிவ வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், இரா.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.

News February 4, 2025

புதுவையில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு

image

அரியாங்குப்பம், அருந்ததிபுரத்தை சேர்ந்த ராஜன் பட்டப்படிப்பு முடித்து, அரசு வேலைக்காக பயிற்சி எடுத்து வந்தார். இவர், காதலித்த பெண், சில நாட்களாக ராஜனுடன் பேசவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

News February 4, 2025

எம்.டி, எம்.எஸ் 3 ஆம் கட்ட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு

image

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நடந்து முடிந்து, மூன்றாம் கட்ட கலந்தாய்வுக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் பட்டியல் மற்றும் காலியிடங்கள் குறித்த விவரங்களை சென்டாக் நிர்வாகம் நேற்று (பிப்.3) வெளியிட்டுள்ளது.

News February 4, 2025

புதுச்சேரியில் இன்று மின்தடை

image

புதுச்சேரியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (பிப்.4) ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, பொதிகை நகர், வாசன் நகர், செவிலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர், ராஜய்யா தோட்டம், கிருஷ்ணசாமி தோட்டம், கண்ணிய வீதி, குயவர் பாளையம், புதுச்சரம், பிருந்தாவனம் மேற்கு, காமராஜ் நகர், பிள்ளை தோட்டம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பயணம் 

image

புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் பேசிய கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக உயர்கல்வித்துறை மூலம் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்படும் தனியாக டெண்டர் விட்டு தனியார் மூலம் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க உயர்கல்வித்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

News February 3, 2025

புதுவையில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு

image

லாஸ்பேட்டையை சேர்ந்த காளிமுத்து மகன் சபரிவாசன் எம்.டெக்.படித்துள்ளார். இந்நிலையில் அவரது செல்போன் எண்ணுக்கு மாத ஊதியத்துடன் வேலை இருப்பதாக கூறி குறுஞ்செய்தி லிங்க் வந்துள்ளது. அந்த செயலிக்குள் அவர்கள் கேட்டபடி பலரிடம் கடன் வாங்கி சபரிவாசன் ஐந்து லட்ச ரூபாய் செலுத்தி ஏமாந்தார். இதனால் அவர் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News February 3, 2025

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியா? நாராயணசாமி

image

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக கேட்கிறீர்கள். இதில் கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும். நான் கட்சியின் சாதாரண தொண்டன் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!