India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி பிள்ளைத்தோட்டம், கங்கை அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அமலா இவரது மகன் திருமுருகன் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 மாதங்களாக மொபைல் போனில் கேம் விளையாடி வந்தார். தாய் கேம் விளையாடியதை கண்டித்ததை அடுத்து அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியை சார்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கான, பிரிமீயர் லீக் எம்.பி.எல். ‘டி-20’ போட்டி வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி துவங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்களை ஏலம் எடுப்பதற்கான நிகழ்ச்சி, திருக்கனூர், விஜய் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் மொத்தம் 350-க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி நைனார்மண்டபம் அகஸ்தினா. இவரிடம் மர்ம நபர் பகுதிநேர வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளார். முதலீடு செய்த பிறகு அதற்கான லாபம் வருவது போல கணினியில் தெரியவந்தது. ஆனால், உண்மையில் இல்லை இதனால் தன்னை ஏமாற்றி ரூ.1.08 லட்சம் மோசடி செய்த மீது நடவடிக்கை எடுக்க கோரி இணையவழிக் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் நேற்று அறிக்கையில் புதுச்சேரி விடுதலை நாள் விழாவில், முதல்வர் ரங்கசாமி ரூ.4,750 கோடி அளவிற்கு புதிய திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு 10 கிலோ அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் வழங்கப்பட்டு வருவதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல பேசியுள்ளார். விடுதலை நாள் விழாவில், முதல்வரின் அறிக்கை வழக்கம் போல உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை காரணமாக, புதுச்சேரி அருகே ஆரோவில் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். நேற்று ஏராளமான சுற்றுலா பயணியர் விசிட்டர் சென்டர் பார்க்கிங் பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்த வந்ததால், இடையஞ்சாவடி – கோட்டக்கரை சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து, போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது.
புதுவை தடய அறிவியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 35 வயதுக்குள் கிரிமினாலஜி தடய அறிவியல் பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குனர், தடய அறிவியல் ஆய்வகம், கிருமாம் பாக்கம், புதுவை என்ற முகவரிக்கு 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அரசின் உள்துறை தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு PRTC நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுச்சேரி – திருச்செந்தூர் (6.11.24) மாலை 7 மணிக்கும், திருச்செந்தூர் – புதுச்சேரி (7.11.24) மாலை 9:30 மணிக்கும், காரைக்கால் – திருச்செந்தூர் (6.11.24) 9 மணிக்கும், திருச்செந்தூர் – காரைக்கால் (7.11.24) 9.30 மணிக்கும் இயக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் காலை முதல் சாரல் மழை பெய்து வரும் நிலையிலும் அடுத்த 2 தினங்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை அறிவிப்பாலும் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தவர்களை எச்சரித்து அனுப்பிய தன்னார்வலர்கள் கடற்கரைக்கு வருபவர்களை திருப்பி அனுப்பியும் வருகின்றனர்.
புதுச்சேரி அமைதியான மாநிலம் என்பதை நிலைநிறுத்தும் வகையில், சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. குற்றங்கள் நடைபெறுவது வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே வேண்டிய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக சாலை விபத்துகளும் பெருமளவில் குறைந்துள்ளது என புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
புதுவை மற்றும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் புதுவை மற்றும் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,புதுவையில் மதியம் 1 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.