Pondicherry

News November 8, 2024

புதுச்சேரியில் ரூ. 2 லட்சம் ஆன்லைன் மோசடி

image

புதுச்சேரி தட்டான்சாவடி சேர்ந்த தண்டபாணியிடம் ரூ.44,000, மூலக்குளத்தை சேர்ந்த டீனாவிடம் ரூ.93,000, நிரவியை சேர்ந்த முருகவேலிடம் ரூ.15,000, குயவர்பாளையம் மாதவன் ரூ. 30,000, அய்யங்குட்டியை சேர்ந்த முத்துவேல் ரூ.11,300, காந்தி நகரை சேர்ந்த உதயக்குமார் ரூ.5,000, சண்முகாபுரம் தினேஷ்குமார் ரூ.31,350 என மொத்தம் 7 பேர் ரூ.2 லட்சத்துக்கு மேல் மோசடி குறித்து சைபர்கிரைம் போலீசார் நேற்று விசாரணை செய்தனர்.

News November 8, 2024

புதுவை பாகூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. திடீர் ஆய்வு

image

டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் நேற்று காலை புதுவை பாகூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு, புகார் மனுக்கள் மீதான விசாரணை நிலை, ரோந்து வாகனங்களை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வின்போது பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித், சப் இன்ஸ்பெக்டர் நந்தக் குமார், விஜயக்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

News November 7, 2024

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு- இளம் பெண் பலி

image

புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விந்தியா (வயது 22). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை மூலகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், டெங்கு பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

News November 7, 2024

புதுச்சேரியில் தவறான சிகிச்சையால் பெண் பலி 

image

மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட ஆலங்குப்பத்தை சேர்ந்த பெண் விந்தியா[22] இன்று உயிரிழந்தார். தவறான சிகிச்சையால் தான் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

News November 7, 2024

1,500 ரூபாய் தீபாவளி உதவித் தொகை – கவர்னர் ஒப்புதல்

image

தீபாவளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்களிடம் உறுதியளித்ததைப் போன்றே, கவர்னர் கைலாஷ்நாதன் 1,500 ரூபாய் தீபாவளி உதவித் தொகை வழங்குவதற்கான கோப்பில் நேற்று கையெழுத்திட்டார். அதையடுத்து இன்று முதல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 1,500 ரூபாய் தருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

News November 6, 2024

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் சிறப்பு முகாம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் தேதியாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும், வாக்காளராக தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்ளுவதற்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணி இன்று 29ஆம் தேதி புதுச்சேரியில், காரைக்கால் துவங்கப்படுகிறது. நவம்பர் 9, 10 மற்றும் 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும்.

News November 6, 2024

புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, புதுவையில் நவம்பர்-07 (வியாழன்), 08 (வெள்ளி) , 09 (சனி), 10 (ஞாயிறு), 12 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மேற்கூறியுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 6, 2024

காரைக்கால் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை தங்கள் இடத்தில் வைத்து பராமரிக்க வேண்டும். சாலைகளில் திரியும் கால்நடைகளை பிடிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிடிபடும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை காவல்துறை மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே கால்நடைகளை உரிமையாளர்கள் திரிய விடாமல் பராமரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

News November 6, 2024

புதுவையில் துப்பாக்கியுடன் சட்டசபைக்கு வந்தவர்களால் பரபரப்பு

image

புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்களை பார்பதற்காக தினமும் ஏரளான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம் இந்நிலையில், நேற்று 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் துப்பாக்கிகளுடன் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த 2 துப்பாக்கிகளை வாங்கி கொண்ட காவலர்கள், பரிசோதித்த பின், முதல்வரை சந்திக்க அனுமதித்தனர்.

News November 5, 2024

புதுச்சேரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலி பறிப்பு

image

புதுச்சேரி எல்லைப்பிள்ளைசாவடி, பவழ நகர் பகுதியில் இன்று நூதன முறையில் 60 வயது மூதாட்டியிடம் மர்ம நபர்கள் தங்களை காவல்துறை விஜிலென்ஸ் பிரிவு காவலர்கள் எனக்கூறி 8.5 சவரன் தங்கச் செயினை பாதுகாப்பு காரணமாக கழட்டி கொடுக்கச் சொல்லி மூதாட்டியை திசை திருப்பி செயினை பறித்து சென்றனர். இது தொடர்பாக ரெட்டியார் பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.