Pondicherry

News February 19, 2025

புதுவை: துணை தாசில்தார்கள் 8 பேர் திடீர் இடமாற்றம்

image

பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 8 துணை தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில், 7 பேர் பத்திர பதிவு துறைக்கு மாற்றப்பட்டனர். காரைக்கால் தாலுகா அலுவலக துணை தாசில்தார்கள் தண்டாயுதபாணி, தீனதயாளன், வில்லியனுார் சப் கலெக்டர் அலுவலக துணை தாசில்தார் ஷிலாராணி ஆகியோர், பத்திர பதிவுத்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை துணை கலெக்டர் வினயராஜ் நேற்று வெளியிட்டுள்ளார்.

News February 18, 2025

கொலைக்கு உடந்தையாக இருந்த காதலி உட்பட 3 பேர் கைது

image

உருளையன்பேட்டை திடீர் நகர் ஸ்ரீதர் மகன் தேவா (எ) தேவக்குமார், மூலக்குளம் ஜெ.ஜெ நகர் சேர்ந்த ஆதி (எ) ஆதித்யா ஆகியோர் கடந்த 14ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை கைது செய்தனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த ரவுடி சத்யாவின் காதலி வம்பாகீரப்பாளையம் சேர்ந்த சுமித்ரா, பெரியார் நகரை சேர்ந்த ஆப்ரகாம், டிவி நகரை சேர்ந்த அரிஷ் பல்லாஸ் ஆகிய மூவரை பெரியக்கடை போலிசார் இன்று கைது செய்தனர்.

News February 18, 2025

புதுவை முதல்வர் தொடங்கி வைத்தார்

image

புதுச்சேரி முழுவதும் நவீன முறையில் ட்ரோன் மூலம் மறு நில அளவை செய்யும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image – ORI) உருவாக்கப்படும். முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நில உடைமைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

News February 18, 2025

புதுச்சேரி: உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதை!

image

புதுச்சேரி மாநிலத்தில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய சுகாதார துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் வருகின்ற சுதந்திர தினத்தன்று உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் குடும்பத்தாரை கவுரவிக்க உள்ளதாகவும் சுகாதார துறை இயக்குனர் ரவிசந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

புதுவையில் வேன் டிரைவர் போக்சோவில் கைது

image

அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் தினமும் வேனில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் வேனில் சென்ற மாணவியை வேன் டிரைவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டதாக அந்த மாணவி பெற்றோர்களிடம் தெரிவித்ததை அடுத்து, மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வேன் டிரைவரை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>[லிங்கை]<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு- இருவர் கைது

image

புதுச்சேரி திருபுவனையைச் சோர்ந்தவர் செந்தில்குமார். மேம்பாலத்தில் உள்ள அவரது உணவகம் மீது பைக்கில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை வீசினர் என்ற புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவெண்டார்கோவில் பகுதியைச் சோர்ந்த சபரிவாசன் அவரது நண்பரான திருபுவனை பெரியபேட் பகுதியைச் சோர்ந்த பிரபாகரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News February 17, 2025

மாபெரும் இலவச ரோட்டரி வேலைவாய்ப்பு முகாம்

image

வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி ஆரோசிட்டி மற்றும் புதுவையில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்களும் ஈக்குவடாஸ் நிதி நிறுவனத்துடன் இணைந்து மாபெரும் இலவச ரோட்டரி வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. முகாமில் 68 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். பட்டதாரிகள் பலர் கலந்து கொண்டனர். மேலும் 315 பேர் உடனடியாக தேர்வாகி பணி ஆணைகளை பெற்று பயன் அடைந்தனர்.

News February 17, 2025

காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை குறைதீர்ப்பு முகாம்

image

புதுச்சேரி ஆளுநர் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் காரைக்கால் மாவட்டத்தில் நாளை 17/02/2025 (திங்கட்கிழமை) மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆட்சியர் வளாகத்தில் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்ப்பு முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 16, 2025

புதுச்சேரியில் பங்குபெறும் இலவச வேலைவாய்ப்பு முகாம்

image

பாண்டிச்சேரியின் ரோட்டரி கிளப்ஸ் பாண்டிச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 16, 2025 அன்று வேலைவாய்ப்பு கண்காட்சி சாரதா கங்காதரன் கல்லூரியில் நடத்துகிறது. தொழில் தொடங்க வேலை தேவைப்படுபவர்கள் கண்காட்சியில் கலந்துகொள்ளலாம். 7ஆம் வகுப்பு முதல் முதுகலை பட்டதாரி வரை தகுதியான பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய 60க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றது., காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெறுகிறது.

error: Content is protected !!