Pondicherry

News August 19, 2025

புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு கன மழை பெய்தது. இன்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல் படி புதுச்சேரி உள்ளிட்ட ஒன்பது துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

News August 18, 2025

புதுவை மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்!

image

புதுவையில் பழங்குடி இன தாவரங்கள், விலங்குகள் என இயற்கையின் பாரம்பரியத்துடன் இருப்பது தான் ஊசுட்டேரி சதுப்பு நிலம். பசுமையான சூழலில் மழைக்காலங்களில் வியக்கும் அழகோடும், படகு சவாரி செய்தும், இயற்கையின் அழகியலை புகைப்படங்களாக பதிவு செய்யவும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் அதிகம் வருகின்றனர். 390 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி நம்மை நிச்சயம் இயற்கையின் அழகில் திகைக்க வைக்கும். SHARE IT.

News August 18, 2025

புதுச்சேரி தபால் கிளையில் பணியாற்ற வாய்ப்பு

image

புதுச்சேரி இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் புதுச்சேரி கிளையில் வங்கித் தொடர்பாளராக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணிக்கு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 30ம் தேதி கடைசி நாளாகும். மேலும் விவரங்கள் அறிய புதுச்சேரி ரங்கப்பிள்ளை தெரு, தலைமை அஞ்சல் நிலையம், இந்திய அஞ்சல் பேமெண்ட்ஸ் வங்கி கிளை மேலாளரை அனுகவும்.

News August 18, 2025

காரைக்கால் புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் பொறுப்பேற்பு

image

புதுச்சேரி அரசின் காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக ரவி பிரகாஷ் இன்று (ஆக.18) மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ரவி பிரகாஷ்-க்கு துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

News August 18, 2025

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு

image

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரிப் பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பு இல்லாத நிலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அமிலத்தன்மை மற்றும் நுவர்ப்பு தன்மை அதிகமாக குடிநீரில் இருக்கின்ற காரணத்தால், அந்த தண்ணீரை குடித்துவிட்டு மக்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

News August 18, 2025

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருப்பது. மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. தமிழ் மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவாற்றலும், செயல்திறனும் மிக்கவர். தேசத்தைத் தனது உயிராகப் போற்றுபவர்.” என கூறியுள்ளார்.

News August 18, 2025

புதுவை: உங்கள் Phone காணாமல் போனா No Tension!

image

உங்கள் Phone காணாமல் போனாலும், இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <>’சஞ்சார் சாத்தி’<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க. SHARE பண்ணுங்க!

News August 18, 2025

புதுச்சேரி: பெண்ணிடம் ரூ.1.08 லட்சம் மோசடி

image

தட்டாஞ் சாவடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அறிமுகமான சிலர், ஆன்லைனில் பகுதிநேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் எனக்கூறி, வாட்ஸ்ஆப் லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்க்கை கிளிக் செய்து, அதில் கூறியபடி ரூ.1.08 லட்சம் செலுத்தி டாஸ்குகளை முடித்துள்ளார். ஆனால், அதற்கான லாபமும், செலுத்திய பணத்தையும் திருப்பி தரவில்லை என கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 17, 2025

புதுச்சேரி: பணி உயர்வை தரும் பஞ்சநதீசுவரர் கோயில்

image

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற பஞ்சநதீசுவரர் கோயில் எனப்படும் திருவாண்டார் கோயில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பஞ்சநதீஸ்வரர், வடுகீஸ்வரரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும், பணி உயர்வு கிடைக்கும், செல்வம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க!

News August 17, 2025

புதுச்சேரி: ரூ.88,000 சம்பளத்தில் LIC-ல் வேலை!

image

புதுச்சேரி மக்களே வேலைவாய்ப்புக்கு ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணிகள் நிரப்படவுள்ளது. (AAO) பதவிகளுக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ₹88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!