Pondicherry

News April 2, 2025

நோய் நொடியை தீர்க்கும் புதுவை லிங்கேஸ்வரர் ஆலயம்

image

புதுவை கண்டமங்கலம் அருகே நவகோள் லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளது. இது சோழர் கால கோயிலாகும். இங்குள்ள நவகிரகங்கள் கருவறையில் உள்ள சிவனை வணங்கிய நிலையில் காட்சி தருகின்றனர். இங்குள்ள சிவனை வணங்கினால் திருமணத் தடை, குழந்தைப் பேறு, வேலை வாய்ப்பு, இழந்த செல்வம் திரும்பப் பெறல், தம்பதி இடையே ஒற்றுமை, நோய் நொடியின்றி நீண்ட வாழ்வு பெறுதல், ஆகியவை அமையும் என்பது நம்பிக்கை. நண்பர்கள் & உறவினர்களுக்கு பகிரவும்

News April 2, 2025

புதுச்சேரியை சேர்ந்தவர் கடலூரில் என்கவுண்டர்

image

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

News April 2, 2025

கார்கள் நேருக்கு நேர் மோதல் – குழந்தைகள் உட்பட 5 பேர் காயம்

image

வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜகுருநாதன் இவர் நேற்று வேகனார் காரில், கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தார். நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு பாலத்தில் கார் சென்ற போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி சென்ற டவேரா கார் அதிவேகமாக வந்த நிலையில், முன்னாள் சென்ற பைக்கின் மீதும், எதிரே வந்த வேகனார் கார் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் குழந்தைகள் உட்பட 5 பேர் காயம் அடைந்தனர்.

News April 2, 2025

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது

image

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் போலீசார் மேற்கொண்டு ஆய்வின் போது பாகூர் பகுதியில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் நேற்று புதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர்.

News April 2, 2025

புதுச்சேரியில் 15 மதுக்கடைகளுக்கு சீல்

image

புதுச்சேரியில் மதுக்கடை உரிமத்தைப் புதுப்பிக்காதவர்களுக்கு கலால்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எச்சரிக்கைக்குப் பிறகும் மதுக் கடைகளின் உரிமத்தைப் புதுப்பிக்காத கடைகளுக்கு கலால்துறை வட்டாட்சியர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான அதிகாரிகள் முதலியார்பேட்டை, சின்னக்காலாப்பட்டு, எல்லைப்பிள்ளை சாவடி, பாகூர் உள்ளிட்ட இடங்களில் 15 மதுக்கடைகளுக்கு நேற்று சீல் வைத்தனர்.

News April 1, 2025

புதுச்செரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமாக உயர்வு

image

மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு இன்று தெரிவித்துள்ளது.

News April 1, 2025

பகுதி நேர வேலை வாய்ப்பு எனக்கூறி 2.35 லட்சம் மோசடி

image

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் சபரிநாதன். இவரை டெலிகிராம் செயலியில் தொடா்பு கொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளதாகவும், வீட்டிலிருந்தபடி சம்பாதிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதை நம்பிய சபரிநாதன் மா்ம நபா் கூறியபடி ரூ.2.35 லட்சத்தை பல தவணைகளில் அனுப்பி ஏமாந்தார். அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News April 1, 2025

புதுவை முன்னாள் முதல்வர் கைது

image

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநில தலைவர் அமுதரசனை தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் முதல்வர் உட்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

News April 1, 2025

அரசு பள்ளிகள் இன்று திறப்பு 2025-26 கல்வி ஆண்டு துவக்கம்

image

புதுச்சேரியில் கடந்த 2024-25 கல்வி ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறை நேற்றுடன் முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்று துவங்கும் பள்ளிகள் வரும் 30ஆம் தேதிவரை இயங்கும். மே 1ஆம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு கோடை விடுமுறை விடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 1, 2025

புதுச்சேரியில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி

image

புதுவையை சேர்ந்த சபரிநாதன் ஆன்லைன் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று நம்பி ரூ2,35,000 முதலீடு செய்தார். ஆனால் அது ஒரு போலியான பங்குச்சந்தை ஆகும். இதேபோல் புதுவையை சேர்ந்த அனுபமா ஜெயஸ்ரீயிடம் ரூ.12,397,விக்ரமிடம் ரூ10000 ஆன்லைன் மோசடி நடந்துள்ளது. சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருகின்றனர். கவனமாக இருக்க உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!