India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாகன விபத்துகளில் இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க, குழு அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, புதுச்சேரியில், இந்த வழக்குகளை கண்காணிக்க, குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட குழுவின் கன்வீனராக சட்டசேவை ஆணைய முதன்மை சார்பு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவினை, சட்டத்துறை செயலாளர் சத்தியமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய கடலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரேகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி நேற்று உத்தரவிட்டார். மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பம் ஆக்கிய கடலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ரேகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி நேற்று உத்தரவிட்டார். மாணவியின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் பச்சையப்பன் ஆஜரானார்.
புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியில் உள்ள கோலக்கார அரங்கசாமி நாயகர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் திறப்பு விழா முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் பாஜக தலைவர் செல்வகணபதி, ஆகியோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார் .
விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்திய வழிபாட்டு மரபில் முழு முதற்கடவுளாக போற்றப்படும் விநாயக பெருமாளின் அருளால் மக்கள் அனைவரும் வளம்பெற வேண்டிக் கொள்வோம். அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கி, வெற்றிகள் சேர என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 07 ஆம் தேதி சனிக்கிழமை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் (தொழில்முறை கல்லூரிகள் உட்பட) உட்பட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு “விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விடுமுறை தினம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார்.
நாடுமுழுவதும், வருகின்ற செப்டம்பர் 7-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கல்வி நிறுவனங்களுக்கு, அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தட்டாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திமுருகன் இவர் நேற்று முன்தினம் இரவு மடுகரை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா, பசுபதி, சதீஷ் ஆகியோர் முன்விரோதத்தில் சக்தி முருகனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மடுகரை சப் இன்ஸ்பெக்டர் குப்புசாமி வழக்குப் பதிந்து கிருஷ்ணா உட்பட மூன்று பேரையும் நேற்று கைது செய்தனர்.
புதுச்சேரி குமரகுருபள்ளத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ரவிக்குமார், தனியார் விடுதி ஊழியர். இவர் காதலித்த பெண் இறந்ததால், மன உளைச்சலில் இருந்து வந்த அவர், எலி பேஸ்ட் சாப்பிட்டார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து, ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அரச முறை பயணமாக இன்று மாஹே சென்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மாஹே ஆற்றங்கரையில் செயல்படுத்தப்பட்ட நடைபாதை மூன்றாம் கட்டப் பணிகளை பார்வையிட்டு அதன் பின்னர் மாஹி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு அங்குள்ள மீனவர்களின் தேவைகள் குறித்தும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும் விசாரித்தறிந்தார். அப்போது அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
Sorry, no posts matched your criteria.