Pondicherry

News March 12, 2025

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 : புதுவை முதல்வர்

image

புதுவை 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. அதில் “புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்”, என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

News March 12, 2025

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை

image

இன்று புதுவை பட்ஜெட் கூட்டத்தொடரில் “புதுச்சேரி மாநிலத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் 50 விழுக்காடு கொண்ட பசுக்கள் வழங்கப்படும். புதுச்சேரியில் உள்ள 2 அருங்காட்சியங்கள் மத்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்படும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வரும் ஆண்டு முதல் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்”, என 2025 – 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

News March 12, 2025

புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வாஜ்பாய் பெயர்; முதல்வர்

image

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று “கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமையவுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் சூட்டப்படும், பத்துகண்ணு பகுதியில் புதிய காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மதிய உணவு திட்டத்தில் முட்டை இனி வாரத்தில் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும்”, என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News March 12, 2025

பள்ளிகளில் வாரம்தோறும் முட்டை வழங்கப்படும்; முதல்வர்

image

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று (மா.12) பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி வழங்கப்படும். வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை இனி வாரந்தோறும் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

News March 12, 2025

மழை கால நிவாரணம் ரூ. 2000 – புதுவை முதல்வர்

image

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரில், “அனைத்து விவசாயிகளுக்கும் மழைகால நிவாரணம் ரூ.2000, வனம் மற்றும் வனமில்லாத பகுதிகளில் 3 லட்சம் மரக்கன்று நடப்படும். பள்ளிகளில் 1 லட்சம் மரக்கன்று வழங்க திட்டம். புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்” ,என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

News March 12, 2025

புதுச்சேரியில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

image

புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் மார்ச் 15 ஆம் தேதி சனிக்கிழமை லாஸ்பேட்டை அரசு பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை பல முன்னணி நிறுவனங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். பங்கு பெற்று பயன் பெறுவீர்..SHARE IT

News March 12, 2025

புதுச்சேரி: ஒரு நாள் ஜிப்மரில் OPD இயங்காது

image

மத்திய அரசு விடுமுறை தினமான மார்ச்14 (வெள்ளிக்கிழமை) “ஹோலி பண்டிகையை” முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு (OPD) இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் OPD பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அன்று அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என ஜிப்மர் இயக்குனர் அறிவித்துள்ளார். (Share பண்ணுங்க)

News March 11, 2025

புதுவை: 10 மணி வரை மழை எச்சரிக்கை

image

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் புதுவையில் இன்று பல்வேறு பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை புதுவை மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட்

News March 11, 2025

புதுச்சேரியில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை

image

புதுவை லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் கோவிலில் வேலை செய்து வந்துள்ளார். அவர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அவரை குடும்பத்தினரிடமிருந்து சற்று விலகி இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். அவர் முககவசம் அணிந்து தனி அறையில் இருந்து வந்துள்ளார்.அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். லாஸ்பேட்டை போலீசார் இன்று வழக்கு பதிந்தனர்.

News March 11, 2025

புதுச்சேரி: மும்மொழி கொள்கை விவாகரம் திமுக-பாஜக மோதல்

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இன்று நடைபெற்றது. திமுக எம்எல்ஏ செந்தில்குமார் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசுகிறேன் என்பதை தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளம் என 5 மொழிகளில் பேசினார். அப்போது பேசிய பாஜக எம்எல்ஏ இதற்காகத்தான் மூன்று மொழிகளை படிக்க சொல்கிறோம். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் சட்டப்பேரவையில் திமுக பாஜக மோதலால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

error: Content is protected !!