India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரிக்கு உட்பட்ட மணவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டி பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (ஏப்.17) காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுமென்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…
புதுச்சேரி தலைமை செயலாளர் சரத் சவுக்கான் இன்று அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை திறம்பட நிர்வகிக்கவும், கோப்புகளுக்கு விரைவாக அனுமதி வழங்க உயர் செயல்திறன் கொண்ட சாதனங்கள் வைத்திருப்பது அவசியம், இந்த சாதனங்களை வாங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள் விருப்பப்படி லேப்டாப், ஐபோன் சாதனக்களை வாங்கி கொள்ளலாம் என தெரிவித்தனர்.
புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றி தழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவர் வரதராஜரை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் மற்றும் சொத்து தகராறு உள்ளவர்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…
புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சீனிவாசன். இவரிடம் மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிபோல் பேசி வங்கி கணக்கிற்கு கே.ஒய்.சி. விவரங்களை புதுப்பிக்குமாறு கூறி ஏ.பி.கே. செயலியை அனுப்பி உள்ளார். இதையடுத்து சீனிவாசனும் ஏ.பி.கே. செயலியை பதி விறக்கம் செய்த சிறிது நேரத்திலேயே அவரது கணக்கிலிருந்து ரூ.5.06 லட்சம் எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார்.
புதுவையில் மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை விழாவில் இன்று புதுச்சேரி முதல்வர் பங்கேற்றார். அதில், மீனவ இன மாணவ மாணவிகளுக்கான கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்கும் எனும் புதிய அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
NLC நிறுவனத்தில் Junior Overman & Mining Sirdar பணிகளுக்கு 171 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Junior Overman பணிக்கு ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சமும், Mining Sirdar பணிக்கு ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அறிய <
புதுச்சேரி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு வரும் ஏப்.27 ஞாயிறு அன்று புதுச்சேரி மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இதற்கான ஹால் டிக்கெட்டினை தேர்வர்கள் https://recruitment.py.gov.in என்ற இணையதளத்திலிருந்து 16.04.2025 முதல் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2233338 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என புதுவை அரசு சார்பு செயலர் அறிவித்துள்ளார்
புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்கள் 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வாதார உறுதிச் சான்றிதழை வரும் மே 2 முதல் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இச்சான்றிதழைகருவூலகத்திற்கு நேரில் வந்தோ (அ) தபால் அலுவலக சேவையை பயன்படுத்துவதன் வாயிலாகவோ பதிவு செய்யலாம். 2025ஆம் ஆண்டிற்கான வாழ்வுறுதிச் சான்றிதழை 30.05.2025க்குள் சமர்ப்பிக்கத் தவறினால் மேற்கொண்டு ஓய்வூதியம் வழங்க இயலாது என DAT இயக்குனர் அறிவித்துள்ளார்.
முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு வங்கி அதிகாரி போல் பேசியுள்ளார். அப்போது வங்கி கணக்கிற்கு பான் கார்டு விவரங்களை புதுப்பிக்குமாறு ஒரு லிங்க்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்க்கை வழியாக கார்த்திக் உள்ளே சென்றவுடன் அவரது வங்கி கணக்கிலிருந்து 72,800 எடுக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இன்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.