India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மதுபான தொழிற்சாலைகள் கொண்டு வருவதை முதலமைச்சர் ரங்கசாமி கைவிட்டு, ஜவுளி பூங்கா கொண்டு வருவதில் நாட்டம் காண வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம் வலியுறுத்தி உள்ளார். இல்லையென்றால் மக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 18, 19, 20, 21 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியலேசானது மிதமான மழையும், மார்ச் 19ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காரைக்காலில், கடந்த 2023ஆம் ஆண்டு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் வந்த நிலையில் கைது செய்யப்பட்ட முகமது இப்ராஹிம் சுல்தான் (55) என்ற முதியவருக்கு இரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்தது. தற்போது குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து காரைக்கால் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், புதுவை போக்குவரத்து துறையில் இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு நாளை (மா.16) நடைபெற உள்ளது. புதுவை பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் இதற்கான தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி – காரைக்கால் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்களின் நலன்கருதி கூடுதல் சிறப்பு பேருந்து இயக்க PRTC நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு மாலை 6.10க்கு ஒரு சிறப்பு பேருந்தும், காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மாலை 5.30, 6.40 மற்றும் இரவு 9.05 மணிக்கு என மூன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு, தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பகம் வரும் 2025 ஆம் ஆண்டு இன்று லாஸ்பேட்டை, அரசு பெண்கள் பொறியல் கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் 2000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக 40 முன்னணி புதுச்சேரி மற்றும் தமிழகம் சார்ந்த தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. பங்கு பெற்று பயன் பெறுவீர்..
புதுவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி ரூ. 29 கோடியில் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த பணிகள் நிறைவு பெறும் நிலையில் திட்டமிடு ரூ.34 கோடியாக உயர்ந்து விட்டது. பஸ் நிலைய கட்டுமான பணி காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் ரோடியர் மில் திடல் தற்காலிக பஸ் நிலையமாக செயல்பட்டது மேலும் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் வரும் மார்ச் 17ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
மஞ்சள் அட்டை (ரேஷன் கார்டு) வைத்திருப்பவர் எல்லாம் வசதி படைத்தவர் அல்ல. எனவே மகளிர் உதவித்தொகை வழங்கும் போது மஞ்சள் அட்டை வைத்திருந்தாலும் வருவாய் சான்றிதழ் கொடுத்தால் அதை பரிசீலிக்க வேண்டும், என சட்டமன்றத்தில் எம்எல்ஏ நாஜிம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று வருவாய் சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மாசி மகத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கிருமாம் பாக்கத்தை அடுத்த பனித்திட்டு கடற்கரையில் குளிக்கச் சென்ற சபரீஸ்வரன் (13) எனும் சிறுவன் கடலில் மூழ்கி மாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் உதவியுடன் தேடினர். நீண்ட நேரம் தேடுதலுக்கு பிறகு சிறுவன் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு பேருந்துகள் பிரதி வெள்ளி கிழமைகளில் புதுவை to காரைக்கால் மாலை 6.10 , காரைக்கால் to புதுவை மாலை 5.30, 6.40 பேருந்துகளும் மற்றும் திங்கள் கிழமைகளில் புதுவை to காரைக்கால் காலை 5.10, 5.25 இரண்டு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. தினசரி பேருந்துகள் தவிர இந்த பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.