Pondicherry

News October 5, 2024

146 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

image

புதுச்சேரி பெத்திசெட்டிபேட்டையில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 மூட்டைகளில் இருந்த 146 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் மற்றும் முகேஷ் குமார் என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

News October 5, 2024

புதுவையில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்கம்

image

புதுவையில் வரும் 27ஆம் தேதி முதல் இண்டிகோ நிறுவனம் சார்பில் விமான சேவை ஹைதராபாத், பெங்களூருவுக்கு மீண்டும் துவங்கப்பட உள்ளது. அடுத்ததாக ஏர்ஷபா நிறுவனம் சார்பில் கொச்சி, தூத்துக்குடி, திருப்பதி, சேலம், கோவை, ராஜமுந்திரி ஆகிய பகுதிகளுக்கும் சிறிய ரக விமான சேவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

News October 5, 2024

புதுச்சேரியில் வங்கிகளின் பெயரை கூறி ரூ1.82 கோடி மோசடி

image

புதுச்சேரி இணைய வழி குற்றத்தடுப்பு போலீசார் எச்சரிக்கை: குறிப்பிட்ட வங்கியில் மேலாளர் பேசுகிறேன் குறைந்த வட்டியில் கடன் தருகிறோம், ஜாமீன் தேவையில்லை வங்கி பரிவர்த்தனை போதும் என்பது போல காப்பீடு பதிவு செயல்முறை கட்டணம் ப்ராசசிங் என அவர்களின் அவசரத்தை புரிந்து கொண்டு 2000 முதல் பல லட்சம் வரை மோசடி செய்வர். எனவே இது குறித்து பொதுமக்கள் ஏமாற வேண்டாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

News October 5, 2024

புதுச்சேரியில் ஓபிசி கணக்கெடுப்பு பணி 95% நிறைவு

image

புதுச்சேரியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் 2011ம் ஆண்டு வரை பொறுப்பில் இருந்தனர். அதன் பிறகு இதுவரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. தற்போது இப்பணி நிலை தொடர்பாக நீதிபதி சசிதரனிடம் நேற்று கேட்டதற்கு ஓபிசி கணக்கெடுப்புப் பணியை கிட்டத்தட்ட முடித்துவிட்டோம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓபிசி மக்கள் தொகையை வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி 95 % நிறைவடைந்துள்ளது.

News October 5, 2024

ஆரோவில் பகுதியில் 20 நாடுகளின் துாதர்கள் ஆய்வு

image

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவிலில் மாத்ரி மந்திர் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து வந்த குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
இக்குழுவில் உலக வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் நிறுவன தலைவர் ராஜிவ்குப்தா, ரிலிகேர் செயல் தலைவர் ரஷ்மி சாலியா, உட்பட 20 நாடுகளின் ஆணையர்கள் துாதர்கள், முதன்மை அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.

News October 5, 2024

புதுச்சேரி விளையாட்டு வீரர்களுக்கு அதிரடி அறிவிப்பு

image

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு தரவரிசைப்படி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது விளையாட்டு வீரர்களுக்கு இளநிலை மேல்நிலைழுத்தர் பணியில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

News October 4, 2024

புதுச்சேரி விரிவுரையாளர்களுக்கு பணி ஆணை வழங்கல்

image

புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக 18.01.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 67 விரிவுரையாளர்கள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 42 நபர்களுக்கு இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி,அமைச்சர் நமச்சிவாயம் இணைந்து பணி ஆணை வழங்கினார்கள். இதில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

News October 4, 2024

காரைக்காலில் ரூ.20 கோடி ஒதுக்கீடு – கலெக்டர்

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “கேலோ இந்தியா திட்டம் மூலம் காரைக்காலில் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்படுத்த ரூ20 கோடி மதிப்பிலான பூர்வாங்க பணிகள் முடிந்துள்ளது. ஒவ்வொரு கொம்யூனிலும் அரசு புறம்போக்கு நிலங்கள் தேர்ந்தெடுத்து விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு மாலை நேரங்களில் மாணவர்கள் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதனால் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்” என்றார்

News October 4, 2024

புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா இன்று தொடக்கம்

image

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சிஸ் இணைந்து ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு குரங்கு பெடல் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சுப்ரேம் வீதியில் உள்ள அலையன் பிரான்சிஸ் கலையரங்கில் இன்று நடைபெறும் விழாவில் இயக்குனர் கமலக் கண்ணனுக்கு முதல்வர் ரங்கசாமி ஒரு லட்சம் ரொக்கம் விருதுகளை வழங்க உள்ளார்.

News October 4, 2024

234 தமிழ் ஆசிரியா்கள் பணியிட மாற்றம்

image

கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் காரைக்காலில் பணிபுரியும் நிலையில் வசிப்பிடப் பகுதிகளுக்கே பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. பணியிட மாற்றத்துக்கான ஆதரவு எதிா்ப்பு காரணமாக பணியிட மாறுதல் உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது 234 பட்டதாரி தமிழ் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் நேற்று பணியிட மாற்றப்பட்டனர். இந்த உத்தரவை கல்வித்துறை அறிவித்தது.