India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் மேலும் சி.சி.டி.வி., மூலம் கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அபராதம் விதித்தும் எச்சரிக்கையை மதிக்காமல் செயல்படுவோர் மீது பிரிவு 133 குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். என புதுவை உள்ளாட்சித்துறை தெரிவித்துள்ளது.
புதுவை காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவத்தின் 9ம் நாள் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று காலை நடக்கிறது. காலை 9 மணிக்கு தேர் புறப்படுகிறது. மாட வீதிகளில் தேர் வலம் வருகிறது. பின், சுவாமிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு, 108 கலச திருமஞ்சனமும், நாளை மறுநாள் மாலை தெப்போற்சவமும் , வரும் 28ம் தேதி மாலை ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
புதுச்சேரி மாநில நுகர்வோர் கூட்டமைப்பு செயலர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் எண்ணையில் பொறித்த உணவுகள் மற்றும் திண்பண்டங்களில் உப்பின் அளவை சரி பார்க்கும் வகையில் உணவுப் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள உப்பின் அளவை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி வில்லியனூர்- சேதுராபட்டு மின்பாதை, பத்துகண்ணு மின் பாதை, மணலிபட்டு மின்பாதை உள்ளிட்ட மூன்று மின்பாதைகளில் நாளை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் (23.5.2024) அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வில்லியனூர், பத்துகண்ணு , ரெட்டியார்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்மின்தடை ஏற்படும் என மின்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று (மே.22) மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரியின் ஒருசில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுவை நகராட்சிப் பகுதியில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவா்களுக்கு இனி அபராதம் விதிக்கப்படும் என ஆணையா் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளாா் . குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மீறி குப்பைகளை பொது இடங்களில் கொட்டினால் சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிமமும் ரத்து செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி பழைய ஜிப்மர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று (22.5.2024) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கோரிமேடு, லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் மேல்நிலைப்பள்ளி துணை இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பில், காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் அனைத்து பள்ளிகளிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நாளை மாலை 4 மணிக்குள் உரிய சான்றிதழ்களுடன் பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 23ம் தேதி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அவசர சிகிச்சை பிரிவு வழக்கம் போல் இயங்கும் என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் போதை பொருளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை சார்பில் எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று பார்சல் மூலம் போதைப்பொருள் வருகிறதா என்பதை கண்டறிய புதுச்சேரி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உடன் பார்சல் சர்வீஸ் இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.