India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாராளுமன்றத்தில் பேசிய புதுச்சேரி காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கம், கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக திண்டிவனத்திற்கு ரயில்வே பாதை அமைக்க வேண்டும். புதுச்சேரிக்கு என்று தனியாக வந்தே பாரத் ரயில் இல்லை. எனவே புதுச்சேரியில் இருந்து மைசூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். காரைக்கால் பேரளம் ரயில்வே பாதை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றார்.
புதுச்சேரியில் பெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மீட்பு மற்றும் சீரமைப்பு செய்வதற்கு நிவாரண நிதி வழங்கப்பட உள்ளது. குடிசை வீடுகளுக்கு ரூ.8,000 பகுதி சேதமடைந்த கல் வீடுகளுக்கு ரூ.6,500, பகுதி சேதமடைந்த ஓட்டு வீடுக்கு ரூ.4,000 என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
புதுச்சேரியில் திமுக மற்றும் தட்டாஞ்சாவடி திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 72ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொது கூட்டம் வரும் 20ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 06.00 மணியளவில் சாரம் அவ்வை திடலில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக தமிழக கழக அமைப்பு செயலாளர் கோ.பாரதி சிறப்புரை வழங்குகிறார். புதுச்சேரி திமுக கழக அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று பூஜ்ய நேரத்தில் எம்எல்ஏ சந்திர பிரியங்கா, புதுச்சேரியில் மஞ்சள் ரேசன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார்.
சென்னையில் உள்ள ஆஸ்திரேலியா நாட்டிற்கான துணைத் தூதர் சிலாய் சாகி (Ms. Silai Zaki) புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை புரிந்தார். அவரை, முதலமைச்சர் ரங்கசாமி (17.03.2025) முதலமைச்சர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அப்போது இருவரும் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொண்டனர்.
உருளையன் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு இன்று சட்டப்பேரவையில் பேசுகையில், லாபத்தில் இயங்கி வந்த மின் துறையை தனியார் மயம் ஆக்கியது துரதிஷ்டவசமானது என்றும், மின் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் அவர்கள் வயது கூடிக்கொண்டு செல்கிறது என்றும் எனவே அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என்று பேசினார்.
புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ள புதியதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்ததை ஏற்க முடியாது என்றும் பொதுமக்களுக்கு தீமை விளைவிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதை எதிர்க்கும் என்றும் இது பொதுமக்களுக்கு தேனில் விஷத்தை கலந்து கொடுப்பதற்கு சமமாகும். எனவே, இந்த அனுமதியை ரத்து செய்யவேண்டும் என்று கலாம் விதை களின்விருச்சம் சமூக இயக்கத்தின் தலைவர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதுவரை உயர்கல்வி சேர்க்கை விண்ணப்பத்திற்கு ரூ.1,000 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனிமேல் அந்த கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரும்பார்த்தபுரம் நான்குமுனை சந்திப்பு வாய்க்காலில் நேற்று ஆண் சடலம் ஒன்று மிதந்தது. தகவலறிந்த வில்லியனூர் போலீசார் உடலை மீட்டு விசாரணை செய்தனர். அது கொம்பாக்கம் குடிநீர் டேங்க் ஆப்ரேட்டர் விஜயகுமார் என்பது தெரிய வந்தது. குடிப்பழக்கமுடைய இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நெல்லித்தோப்பு டி.ஆர். நகர், 1, 2, 3வது குறுக்கு தெருக்களில் அதிகளவில் நாய்கள் உள்ளது. அதில், ஒரு நாய் கடந்த சில நாட்களாக அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. நேற்று முன்தினம் 2 சிறுவர்களையும், நேற்று 2 பெரியவர்கள் என 4 பேரை கடித்து குதறியது. இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஊழியர்கள், அந்த நாயை பிடித்து ஊசி போட்டுவிட்டு, அங்கேயே விட்டு சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.