India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் மாவட்ட நிர்வாகம், புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கமும் இணைந்து அனைத்து மாணவர்களுக்கும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இது சம்பந்தமாக விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்துவது சம்பந்தமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் இன்று மதகடியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அதில் விடுபட்ட 424 பேருக்கும் இன்சூரன்ஸ் தொகையை பெற்றுக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணீஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில்; காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் புகார்களை உடனடியாக காரை காவலன் செயலியில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் காரைக் காவலன் செயலி மூலம் தெரிவிக்கப்படும் புகார்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக உதவி பதிவாளர் ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; புதுவை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு நேற்று பருவத்தேர்வு (செமஸ்டர்) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பருவத் தேர்வுகள் அடுத்த மாதம் ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதேபோல் மற்ற தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசுத்துறைகளில் பணியாற்றும் 16 உதவியாளர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 வேலை நாட்களுக்குள் துறைத்தலைவர்கள் விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விவரங்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பணியாளார் & நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு அனுப்பி வைக்குமாறு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் இன்று அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவரது வீட்டிற்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதனை தொடர்ந்து கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் புஸ்ஸி ஆனந்த் கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
புதுச்சேரி அரசு மாநில பயிற்சி மையம், மாநில எழுத்தறிவு இயக்கம் சார்பில் உல்லாஸ் கற்றல் மையம் திறப்பு விழா காட்டேரிக்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு உல்லாஸ் கற்றல் மையத்தை திறந்து வைத்து தன்னார்வல ஆசிரியருக்கு அடையாள அட்டையும் கற்போருக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
புதுவை அரசு துறைகளில் பணியாற்றும் உதவியாளர்கள் 16 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை 15 வேலை நாட்களுக்குள் துறைத்தலைவர்கள் விடுவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்நோக்கு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள் குறித்த விவரங்களை வருகிற 31ஆம் தேதிக்குள் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு அனுப்பிவைக்குமாறு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்த செந்தில்குமார் விஜயலட்சுமி தம்பதியின் மகன் கிஷோர் கடந்த 31.12.2023 அன்று கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு தொகையினை முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் நேற்று வழங்கினார்.
புதுவை முன்னாள் எம்எல்ஏவும், தவெக கட்சியின் பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு, தவெக கட்சியின் தமிழக நிர்வாகிகள் பல்வேறு முக்கிய சாலைகளில் பேனர் வைத்துள்ளனர். இந்த நிலையில் நெல்லிதோப்பு சேர்ந்த சுந்தர் என்பவர் பேனர் தடை சட்டம் இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கு இடையூராக பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
Sorry, no posts matched your criteria.