Pondicherry

News September 4, 2024

புதுச்சேரி முதல்வர் வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில், ஆசிரியர் தினம் என்பது ஆசிரியர்கள் மீது இந்த சமூகம் வைத்திருக்கும் மரியாதையையும் போற்றுதலையும் எடுத்துக்காட்டுவதாகும். ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கித் தருவதில் தங்கள் வாழ்நாளை செலவிடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் இந்தாளில், எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கிறேன்.

News September 4, 2024

பேனர் வைப்பது தண்டனைக்குரிய குற்றம்: ஆட்சியர் எச்சரிக்கை

image

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைப்பது போன்ற செயல்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

News September 4, 2024

மத்திய அரசின் நிதியுதவி மூலம் புதுவையில் நலத் திட்டங்கள்

image

புதுச்சேரி மரப்பாலத்தில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய அரசின் நிதியுதவி மூலமே மகளிர் மாதாந்திர நிதியுதவித் திட்டம், சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மத்திய பாஜக அரசின் ஊக்குவிப்புத் திட்ட நிதிகளும் புதுவைக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.

News September 4, 2024

புதுச்சேரியில் மேம்பாலங்கள் அமைக்க அறிக்கை தயாரிப்பு

image

புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம் போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் மேம்பாலம் அமைக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மாநில பொதுப் பணித் துறை அமைச்சா், மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்து, புதுச்சேரியில் பாலம் அமைப்பது குறித்து பேசியுள்ளாா். விரைவில் புது தில்லி சென்று மத்திய அமைச்சா்களை சந்தித்து மேம்பாலங்கள் அமைக்க வலியுறுத்த உள்ளேன் என்றார்.

News September 4, 2024

பேனர் வைப்பது தண்டனைக்குரிய குற்றம்: ஆட்சியர் எச்சரிக்கை

image

புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைப்பது போன்ற செயல்கள் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட்அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.

News September 4, 2024

மதுக்குடிக்க பணம் தராததால் கணவர் தற்கொலை

image

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன், இவர் மனைவி சோபியாவிடம் குடிக்க பணம் கேட்டார். சோபியா பணம் கொடுக்க மறுக்கவே கோபித்து கொண்டு சென்ற பாலச்சந்திரன் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News September 4, 2024

ஹவுரா எக்ஸ்பிரஸ் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

image

தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 2:14 மணிக்கு புறப்பட்டு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (எண் – 22842) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் கண்னியாகுமாரியில் இருந்து வரும் 7ம் தேதி ஹவுரா புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் – 12666) ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 4, 2024

கோவளம் அருகே விபத்து 4 பேர் பலி

image

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளாகி 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவளம் அருகே உள்ள செம்மஞ்சேரியில் நடந்த இந்த விபத்தில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று லோடு வேன் மீது மோதியது. கார் வேனுக்கு அடியில் சிக்கியதால், காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து, போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 4, 2024

புதுவையில் கட்டுப்பாட்டை மீறி போஸ்டர்கள் மீது கடும் நடவடிக்கை

image

புதுச்சேரியில் பொதுமக்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். மேலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்களை கண்டித்து சமூக அமைப்பினர் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர், ஜனநாயக உரிமையை கேட்க உரிமை உண்டு ஆனால் அந்த கட்டுப்பாட்டை மீறி போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தெரிவித்தார்.

News September 4, 2024

21 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் அறிவிப்பு

image

புதுவை கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் புதுவையைச் சேர்ந்த ஆசிரியர்களில் சிறந்த பணிக்காக டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, முதல்வரின் சிறப்பு விருது, கல்வித் துறை அமைச்சர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி புதுவையில் 2024ஆம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது 11 ஆசிரியர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு செப்.5ஆம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!