Pondicherry

News September 5, 2024

நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினரிடம் எம்.பி. கோரிக்கை

image

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024க்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் முகமது ஜவாத் எம்.பி.யை, காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று தனியார் ஹோட்டலில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளின் கருத்துக்களை மனுவாக சமர்ப்பித்து, புதுச்சேரி இஸ்லாமிய மக்களின் குறைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

News September 5, 2024

நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினரிடம் எம்.பி. கோரிக்கை

image

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா 2024க்கான நாடாளுமன்ற குழு உறுப்பினர் முகமது ஜவாத் எம்.பி.யை, காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் நேற்று தனியார் ஹோட்டலில் சந்தித்து பேசினார். அப்போது புதுச்சேரி அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகளின் கருத்துக்களை மனுவாக சமர்ப்பித்து, புதுச்சேரி இஸ்லாமிய மக்களின் குறைகளை நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

News September 5, 2024

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி எச்சரிக்கை

image

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இயற்கையான மூலப்பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றால் செய்ய வேண்டும். மேலும் விநாயகர் சிலைகளை உருவாக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுக்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

News September 5, 2024

புதுச்சேரியில் 30 பேர் தகுதி

image

புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான 3ஆம் கட்ட கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி வெங்கடேஸ்வரா உள்ளிட்ட கல்லூரிகளில் மொத்தம் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News September 5, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் அழகானந்தன் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகியவற்றில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது வரும் செப்.30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு இலவச சீருடை, மதிய உணவு, மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும்.

News September 4, 2024

கோட் திரைப்படம் – புதுச்சேரியில் சிறப்பு காட்சிக்கு அனுமதி

image

நடிகர் விஜய் நடிப்பில் கோட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த நிலையில் புதுவையில் திரைப்படம் 15 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இதற்காக நாளை முதல் வரும் எட்டாம் தேதி வரை சிறப்பு காட்சிக்கு மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதி வழங்கி உள்ளது. இந்த நாட்கள் மட்டும் கூடுதலாக ஒரு காட்சி என ஐந்து காட்சிகள் புதுவையில் திரையிடப்பட உள்ளது.

News September 4, 2024

ஆசிரியர் தினம் – புதுச்சேரி கவர்னர் வாழ்த்து

image

புதுச்சேரி துணை ஆளுநர் கைலாஷ்நாதர் இன்று வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் சிந்தனை வளமும் செயல் திறமும் மிகுந்த வலிமைமிக்க பாரதத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்களை வழி நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

News September 4, 2024

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் வாழ்த்து

image

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், பள்ளியில் கால் எடுத்து வைக்கும் மாணவர்களை ஒரு புத்தகமாக உருவாக்கும் ஆசிரியர்களின் பொறுமையும் தியாகமும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் அல்ல, ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட வேண்டும் என்றும் புதுச்சேரி மாநில ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

News September 4, 2024

நீதிமன்ற வழக்கு முடிந்ததும் 60 எஸ்.ஐ. பணியிடம் நிரப்பப்படும்

image

புதுச்சேரி காவல் தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நீதிமன்ற வழக்கு முடிந்த பின் 60 துணை ஆய்வாளர்கள் பணியிடம் நிரப்பப்படும். சாலை பாதுகாப்புக்கு ஒரு குழு அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் கட்டணம் தமிழகத்தைவிட புதுச்சேரியில் குறைவு எனத் தெரிவித்தார்.

News September 4, 2024

புதுச்சேரியில் 20 கிலோ கொண்ட வித்யா விநாயகர் சிலை

image

புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஜீவானந்தம் அரசு மேல்நிலைப்பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் வழிகாட்டுதலின்படி, அப்பள்ளியில் நுண்கலை பிரிவில் பயிலும் மாணவர்கள் விநாயகர் சதுர்த்தியை யொட்டி, 20 கிலோ பயனற்ற காகிதங்களை கொண்டு 5 அடி உயரத்தில் ரசாயனம் எதுவும் இன்றி வித்யா விநாயகர் சிலையை ஒருவார காலத்தில் உருவாக்கியுள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

error: Content is protected !!