India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோரை இன்று சந்தித்து புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் பாரதி தலைமையில் நினைவு பரிசும், சால்வையை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் கௌரவ தலைவர் ரவி ஜான் செயலாளர் மருது வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரியும், ப்ரீபெய்டு மீட்டர் திட்டத்தை கைவிட கோரியும், மின்துறையை தனியார் மயம் ஆக்குவதை கைவிட கோரியும் இந்தியா கூட்டணி சார்பில் வருகிற 18ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள சனிபகவான் ஆலயத்தில் நேற்று நடிகர் ராஜினிகாந்தின் மகளும், திரைப்பட இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்பொழுது சனீஸ்வர பகவான் ஆலயத்தில் விநாயகர், தர்ப்பாரண்யேஸ்வரர், அம்பாள் சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
நெட்டப்பாக்கத்தை சேர்ந்த கேசவன் சீறுநீரக கல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். இதற்கிடையில் இவரது தாய் காசியம்மாள் கடந்த மாதம் 20ஆம் தேதி இறந்து விட்டார். இதனால் மனமுடைந்த கேசவன் நேற்று இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் திருச்சி ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் புதுச்சேரி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் விரைவு ரயில் (16116) செப்.23, 27, அக்.2 ஆகிய தேதிகளிலும், விழுப்புரம் வரும் மெமு ரயில் (06738) செப்.27, அக்.2 தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் நகரங்களுக்கு இணையாக வளர்ச்சி பெற வேண்டும் என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தால்”மக்களை தேடி மாவட்ட ஆட்சியர்”என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இன்று கோட்டுச்சேரி கொன்னக்காவளி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. தங்கள் கிராமத்தில் இல்லாத அடிப்படை வசதிகள் மற்றும் குறைபாடுகளை ஆட்சியரிடம் மனுவாக வழங்கினார்கள்.
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீட் அல்லாத படிப்புகளுக்கு 3கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்து வருகிறது. நீட் அல்லாத படிப்புகளில் காலியாக உள்ள விவரங்களை கல்லூரி இட ஒதுக்கீடு மற்றும் பாட வாரியாக சென்டாக் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் 1573 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன், மீனவர். இவர் கடலூர் வியாபாரி மணியிடம் ரூ.32 லட்சம் மதிப்பிலான மீன்களை அனுப்பியுள்ளார். அதற்கு ரூ.20 லட்சம் மட்டும் முருகனிடம் கொடுத்தார். மீதி பணத்தை கேட்டபோது மணி அலைக்கழித்துள்ளார். இதனால் மனமுடைந்த முருகன் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கினார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக புதுச்சேரி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து வில்லியனூரில் உள்ள அவரது வீட்டில் முதல்வர் ரங்கசாமி நேரில் சந்தித்து அவருக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நமச்சிவாயத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
திருச்செந்தூரில் முருகனை வழிபட்ட பின்பு இன்று செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் நான் முதல்வராக இருந்தபோது அப்போதைய ஆளுநர் கிரண்பேடி என்னை பணி செய்ய விடாமல் தடுத்தது போல் தமிழக ஆளுநர் ரவி தமிழக முதல்வர் ஸ்டாலினை பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார். தமிழக ஆளுநர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.