India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000 உயர்த்தி வழங்கப்ப டும் என சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சட்டசபையில் அதற்கான நடவடிக்கை எடுத்தார். அதன்படி புதுவை சமூகநலத்துறையின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கூடுதலாக ரூ.1000 உயர்த்தி வழங்கப்படும். இதன்மூலம் புதுவையில் 21,329 ரூ.1000 பயனடைவர் என தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு போனஸ் அறிவித்தது. புதுச்சேரி அரசு சார்பில் மொத்தமாக 23,000 அரசு ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்கும். உற்பத்தி சாராத அரசு ஊழியர்கள் தலா ரூ.7000-த்திற்கு மிகாமல் அவர்கள் போனஸ் பெறுவர் என்று முதலமைச்சர் ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.
தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் புதுவை பா.ஜ.க எம்.பி செல்வகணபதிக்கு சம்மன் புதுச்சேரி பா.ஜ.க எம்.பி செல்வகணபதி, சூரஜ், பங்கஜ் லால்வாணி ஆகிய 3 பேருக்கு சம்மன் வழங்கி, வருகிற 25ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிசிஐடி போலீசார் இன்று உத்தரவிட்டுள்ளனர் . மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஹவாலா பணம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்தில் மீண்டும் பாக்கெட் சாராயம் விற்பனைக்கு தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையான தடை அமல்படுத்தப்படுகிறது. மேலும், பிளாஸ்டிக் கப், கேரி பேக் உள்ளிட்டவை தடிமன் எதுவாக இருந்தாலும் பிளாஸ்டிக் மேலாண்மை விதிகளின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, சின்னவாய்க்கால் வீதியை சேர்ந்தவர் பாபு அப்துல் ரகுமான். இவரது மனைவி சர்மிளா. இருவருக்கும் இடையே குடும்ப பிரச்னை உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்னையில், சர்மிளாவை பாபு அப்துல் ரகுமான் தாக்கினார்.இதுகுறித்து சரமிளா கொடுத்த புகாரின் பேரில், பாபு அப்துல் ரகுமான் மீது, ஒதியஞ்சாலை போலீசார் நேற்று வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
புதுவையில் அக்.21-ஆம் தேதி முன்னாள் படை வீரா்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த
முகாமில் பங்கேற்க விரும்பும் முன்னாள் படை வீரா்கள் & குடும்பத்தினா் தங்களது படை பணிச் சான்றிதழ், அடையாள அட்டை, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை, ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
புதுவை சென்டாக் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பின்படி, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பி.டெக்., பி.எஸ்சி., நர்சிங், பிசியோதெரபி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகள், சட்டபடிப்புகள், கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்பு விண்ணப்பிக்காத மாணவர்கள் சென்டாக் இணையதளம் மூலம் நாளை 19ம் தேதி மதியம் 2:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை அரசு மருத்துவக் கல்லூரியில் ஏழு இடங்கள் காலியாக உள்ளது. விரைவில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது என்றும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களும் பல காலியாக உள்ளன. மேலும் அரசு கல்லூரிகளில் சுயநிதி அடிப்படையில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்கள் அனைத்தும் அரசு இட ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி நடந்தது. இப்போட்டியில், சப் ஜூனியர் பெண்கள் பிரிவில், புதுச்சேரி மாநிலம் சார்பில் பங்கேற்ற ஹர்ஷிகா, 64 கிலோ எடை பிரிவில், வெண்கல பதக்கம் வென்றார். இவர், ஸ்னாட்ச் (snatch) முறையில் 80 கிலோ, கிளீன் அண்ட் ஜர்க் முறையில் 98 கிலோ, என மொத்தமாக 178 கிலோ எடை தூக்கி வெண்கல பதக்கம் வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்தார்.
புதுவை சென்டாக்கில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் மூன்றாவது கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க உள்ளது. அப்போது ஜிப்மரில் இடம் கிடைத்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட உள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் மாணவர்கள் தெரிவிக்கலாம் என்று சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா நேற்று தெரிவித்தார். ஷேர் செய்யவும்
Sorry, no posts matched your criteria.