India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி, காரைக்காலில் அதிகரித்து வரும் கோயில் நிலங்கள் அபகரிப்பு புகார்களையடுத்து,கோயில் நிலங்களை மறு கணக்கெடுப்பு செய்ய முதல்வர் கவர்னர் உத்தரவின் பேரில் அறநிலையத்துறை செயலர் நெடுஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மைக்காக தனிபோர்ட்டல் கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் 243 கோயில்களில் எடுக்கப்பட்டுவருகிறது.
புதுச்சேரி காரைக்கால் மற்றும் ஏனாமில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு முதல் பருவத்தேர்வு விடு முறை முடிந்து, இன்று மீண்டும் பள்ளி கள் திறக்கப்படுகிறது. புதுச்சேரி, காரைக்கால், மற்றும் ஏனாமில் உள்ள பள்ளிகளுக்கு அக்-11 முதல் அக்-20 வரை அளிக்கப்பட்டது. 10 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்படுகிறது
புதுச்சேரி முத்திரையர்பாளையத்தில் உள்ள இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2003ம் ஆண்டு 10ம் வகுப்பு பயின்ற சந்திப்பு நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.முன்னாள் மாணவர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டு தங்களது பள்ளி பருவ சூழல்களையும், நினைவுகளையும், தற்போதைய சூழல்களையும் பகிர்ந்து கொண்டனர். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தாங்கள் கல்வி பயிற்றுவித்த விதங்கள் செயல்பாடுகளை பகிர்ந்தனர்.
ஒடிசா மாநிலம், ஜெகதிகபுரத்தைச் சேர்ந்த அர்தோஷ் பத்ரா (30). இவர், புதுவை மேட்டுப்பாளையத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் பாட்டில் கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரது அறையில், மயங்கி விழுந்து மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுவை காலாப்பட்டு பல்கலைக்கழகத்தில் சுவரில் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த 10 அடி நீளமுள்ள இரும்பு கம்பி காணாமல் போனது இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, பள்ளிக்கு அழைத்துச் செல்லும் சிறிய வேனில் இரும்பு கம்பிகளை அறுத்து சென்றனர். விசாரணையில் சட்டக் கல்லூரி ஊழியர் சசிகுமார் (ஒடிசா) சுதர்சன் மற்றும் ஜனா ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளதாவது, இணைய வழியில் இளைஞர்களை குறி வைத்து மசாஜ் மையங்கள் போன்ற தகவல்கள் மோசடியாளர்களால் கையாளப்படுகின்றன. ஆகவே, பணத்தை செலுத்தி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். அத்துடன், மோசடிக் கும்பலால் பாதிக்கப்படுவோர் பயப்படாமல் புகாரளிக்க வேண்டும். கடந்த 2 மாதங்களில் ரூ.7 லட்சம் மோசடி நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுவையில் உலக வங்கி நிதிகள் சம்பந்தமான கூட்டத்தில் எந்த சட்ட விதியின் கீழ் சபாநாயகர் அழைக்கப்பட்டார் என அவரை அழைத்த அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்க வேண்டும். கடந்த காலங்களில் சபாநாயகர் தொடர்பான மரபுகளை மீறப்பட்டிருந்தாலும், மீண்டும் மரபுகளை மீறுவது ஆளுநர் அனுமதிக்க கூடாது, சபாநாயகரின் செயலை முதல்வர் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார் என அதிமுக செயலாளர் அன்பழகன் குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை மற்றும் புதுச்சேரி வணிக விழா சங்கம் இணைந்து நடத்தும் புதுச்சேரி வணிகத் திருவிழா அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. காரைக்கால் காத்தாப்பிள்ளை கோடியில் வணிகத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று சனிக்கிழமை(19/10/24) விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
புதுவையில் பல்வேறு காவல் நிலையங்களில், கான்ஸ்டபிள்களாக பணியாற்றி வருவோருக்கு சீனியரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க காவல் உயர் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் 129 போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஏட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நேற்று சீனியர் எஸ்.பி., சுபம் கோஷ் பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.