India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில கூட்டுறவு நுகர்வோர் இணையம் (confed) சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி-2024 மூலம் 1000 ரூபாய் மதிப்புள்ள சர்க்கரை, ஏண்ணெய், பருப்பு, மைதா, கோதுமை போன்ற 10 பொருட்களை 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் N.ரங்கசாமி அறிவித்துள்ளார்.
முத்தியால்பேட்டை, கேஆர் டபிள்யூஏ பேத்தாங் விளையாட்டு மைதானம் அருகில் கடல் மாதா சிலை உள்ளது. இந்நிலையில் அங்கு இருந்த சிலையை ராஜ் என்பவர் துண்டு துண்டாக உடைத்து அங்கிருந்து பெரியவர்களை அசிங்கமாக திட்டி மிரட்டுவதாக வினோத் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த முத்தியால்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் அவர்கள் ராஜி என்கிற புஷ்பராஜை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு, புதுச்சேரியில் கட்டிட தொழிலாளர்களுக்கு தீபாவளி ஊக்கத்தொகையாக ரூ.5,000, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும். கான்பெட் மூலமாக தீபாவளி சிறப்பங்காடியில் முந்திரி, திராட்சை, வெல்லம் உள்ளிட்ட ரூ.1,000 மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500-க்கு மானிய விலையில் வழங்கப்படும்.
புதுவையில் வரும் 27ஆம் தேதி இன்டிகோ விமான சேவை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது விமான சேவை தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விமான நிலைய அதிகாரி கூறுகையில், இது பண்டிகை காலம் என்பதால் மக்கள் விமானத்தில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முக்கிய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனவே, இந்த சேவை டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
புதுவை ரயில்வே போலீசார் நேற்று கூறியதாவது,ரயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான பட்டாசுகள், டீசல், பெட்ரோல் போன்றவற்றை கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கும்போது வியாபாரிகள் அல்லது பயணிகள் இந்தத் தடையை மீறி பட்டாசுகளை கொண்டு செல்ல முயற்சிப்பார்கள். இதனால் மற்ற பயணிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தடையை மீறி பட்டாசுகள் கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியிலிருந்து புதன்கிழமை பகல் 2.15 மணிக்கு ஹெளரா அதிவிரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். விழுப்புரம் வழியாகச் செல்லும் இந்த ரயில் முழுவதுமாக புதன்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல, புதுச்சேரியிலிருந்து வாரந்தோறும் வியாழக்கிழமை மாலை 6.50 மணிக்கு புவனேஸ்வருக்கு அதிவிரைவு ரயில் புறப்படும். இந்த ரயிலும் வியாழக்கிழமை (அக். 24) ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இன்று (அக்.22) புதுச்சேரி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
புதுச்சேரியில் லஞ்ச புகார்கள் அதிகரித்துள்ளதை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகாரளிப்பதை தவிர்த்து சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் குவிந்து வருகின்றன. இதனால் சிபிஐயின் கண்காணிப்பு வளையத்தில் முக்கியத் துறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆதாரங்களுடன் சிபிஐக்கு புகார்கள் அனுப்பி வருவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கையும் களவுமாக பிடிக்கும் வகையில் சிபிஐயினர் தயாராகி வருகின்றனர்.
புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தீபாவளியையொட்டி நேற்று 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ரங்கசாமி அடுத்த மாதம் 14 மற்றும் 15ம் தேதி அன்று புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் திறந்து, சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ, மஞ்சள் கார்டுகளுக்கு 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார்.
புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் மீதான அமலாக்கத்துறை வழக்கில் விசாரணையை தொடர உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.