India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி எம்பி செல்வகணபதி செய்தி அறிக்கை: நான் புதுச்சேரி பாஜக மாநில தலைவராக எம்பியாக எனது பணிகளை சிறப்பாக செய்து வருகின்றேன் எனது வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத சிலர் என் மீது அவதூறான செய்திகளை பரப்புகிறார்கள் சில தொலைக்காட்சிகள் சனிக்கிழமை 26.10.2024 அன்று எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு சிபிசிஐடி வழக்கை காட்டி தவறான செய்திகளை ஒளி பரப்பி இருப்பது கண்டிக்கத்தக்கது
.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அனைத்து அமைச்சர்களுக்கும் தலா 1,000 கிலோ இனிப்புகளும், 1,000 பட்டாசு பெட்டிகளும், அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு தலா 500 கிலோ இனிப்புகளும், 500 பட்டாசு பெட்டிகளும் வழங்கி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 55 ஆசிரியர்கள் கல்வி சாராத பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறி, புதுவை மக்கள் தமிழ் வளர்ச்சி சங்கம் பொதுநல மனு தாக்கல் செய்தது. மனு விசாரணையில் அரசு இன்னும் எத்தனை ஆசிரியர்கள் கல்வி சாராப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
புதுச்சேரி லெனின் வீதியில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் உள்ளது. இங்கு, பல்வேறு தொழில், வேலை வாய்ப்பு தொடர்பாக பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, அழகு நகைகள் தயாரிப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வரும் 7ம் தேதி கடைசி நாளாகும். இதற்கான பயிற்சி 11ம் தேதி துவங்குகிறது. ஷேர் செய்யவும்
புதுச்சேரி வருவாய் துறையில், துணை தாசில்தாராக 5 ஆண்டு பணிபுரிந்த 12 பேருக்கு அடாக் அடிப்படையில் தாசில்தாராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை வருவாய் துறை செயலராக இருந்த கலெக்டர் குலோத்துங்கன் பிறப்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பணியாற்றி வரும் 11 தாசில்தார்கள் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா செல்லலாம் என்று முடிவு செய்வோர் பலர் புதுச்சேரியை தேர்வு செய்வர். இந்நிலையில், லோன்லி பிளானட் ( Lonley Planet) என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டு சுற்றுலா செல்ல சிறந்த இடங்களுக்கான பட்டியலில், உலக அளவில் 2வது இடத்தை புதுச்சேரி பிடித்துள்ளது. மேலும், முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டின் Toulouse என்ற நகரம் உள்ளது. உங்கள் கருத்துக்களை COMMENT மற்றும் SHARE செய்யவும்.
புதுச்சேரி பாஜக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் முன் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து 3 மாதம் அவகாசம் வேண்டும் என இன்று செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.
மக்களவை தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் செல்வகணபதி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார். சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த ஹவாலா புரோக்கர்கள் எனப்படும் பங்கஜ் லால்வாணி, சூரஜ் ஆகியோரும் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி அரசின் திட்டத்தின்கீழ் 2024-25 நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டிற்கு அதாவது ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2024 மாதங்களுக்கு புதுச்சேரி பகுதியை சேர்ந்த 100 பதிவு பெற்ற விடைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மீதம் உள்ள டீசல் மானிய தொகை இன்று அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார்.
புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாவது கட்ட சிறப்பு கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இடம் கிடைத்த மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து இன்று மாலைக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.