Perambalur

News August 8, 2024

பெரம்பலூர் எஸ்பி மாற்றம்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த ஷியாமளா தேவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ஆதர்ஷ் பச்சேராவை புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆதர்ஷ் பச்சேரா தற்போது திருநெல்வேலி துணை போலீஸ் கமிஷனராக இருந்து வருகிறார். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், பல பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 8, 2024

பெரம்பலூர் எம்பி குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் எம்பி அருண் நேரு நேற்று, மத்திய அரசு மாநில அரசுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதி வழங்குவதில்லை. மேலும் மத்திய அரசு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் பணிபுரிவதில்லை என்று நேற்று மக்களவையில் குற்றம் சாட்டினார். இதுகுறித்து உங்களின் கருத்துக்களை COMMENTSல் பதிவிடவும்.

News August 8, 2024

பெரம்பலூர் எஸ்பி அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட காவல் துறையின் தொலைத் தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன. இந்த ஏலம் ஆகஸ்ட் 13ஆம் தேதி காலை 11 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் ரூ.500 செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட எஸ்பி ஷ்யாமளாதேவி நேற்று அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News August 7, 2024

பெரம்பலூர் ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் 

image

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் பெரம்லூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று  07.08.2024 நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

News August 7, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

News August 7, 2024

விவசாயிகளுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை துறை அறிவிப்பின்படி, அரசு மானியத்தில் தெளிப்பு நீர் பாசனம், சொட்டுநீர் பாசனம், அமைப்பதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் ஆலத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செட்டிகுளம், கிராம நிர்வாக அலுவலகத்தில் 09.08.2024, காலை-10 மணிமுதல் நடைபெறவுள்ளது. விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 1333 குறட்பாக்களை ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 15,000 பரிசு வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று கொண்டு, 20.9.2024 அன்று மாலைக்குள் விண்ணப்பங்கள் அளித்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04328-225988 தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.

News August 7, 2024

பெரம்பலூரில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்

image

பெரம்பலூரிலிருந்து அரணாரை வழியாக புதுநடுவலூர் வரை செல்லும் சிற்றுந்து இன்று காலை பெரம்பலூர் பழைய பேருந்துநிலையம் வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு சரியான முறையில் அரசு பேருந்து இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

News August 7, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் 324 மி.மீ. மழை

image

பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அதன்படி பெரம்பலூர், தழுதாழை, பாடாலூர், வேப்பந்தட்டை, வாலிகண்டபுரம், அகரம்சீகூர், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. மேலும் மாவட்டத்தில் வேப்பந்தட்டை பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் சராசரியாக 29.45 மி.மீ. மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News August 7, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடைகளுக்கும் இந்த மாதம் 21ஆம் தேதி வரை தோல் கழலை நோய் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அருகிலுள்ள கால்நடை மருத்துவனைக்கு சென்று தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளும் படி ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஷேர் செய்யவும்.

error: Content is protected !!