Perambalur

News August 9, 2024

பெரம்பலூர் ஏ.எஸ்.பி.க்கு பதவி உயர்வு

image

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களின் காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவில் ஏ.எஸ்.பி.யாக பணிபுரிந்த வேல்முருகன், சேலம் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News August 9, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேற்று அழைப்பு விடுத்துள்ளார். இது தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு இணையாக நடைபெறுகிறது. எனவே இதில் அதிக அளவு வீரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் தொடர்புக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். SHAREIT

News August 9, 2024

தமிழ் மாநில காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் நியமனம்

image

தமிழ் மாநில காங்கிரஸ் பெரம்பலூர் மாவட்ட தலைவராக ஆலத்தூர் ஏ எஸ் ஆர் சித்தார்த்தன், மாநில குரு உறுப்பினராக வி. கிருஷ்ண ஜனார்த்தன், மாநில கொள்கை பரப்பு செயலாளராக காரை சுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சிறப்பு அழைப்பாளராக நாட்டார் மங்கலம், ஜெயராமன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜி கே வாசன் நேற்று நியமனம் செய்துள்ளார்.

News August 9, 2024

தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டின் தமிழ்நாடு அரசின் சுற்றுலா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள சுற்றுலா தொழில் முனைவோர்கள் www.tntourismaward.com என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

போட்டி தேர்வில் வென்றவர் மாவட்ட நூலக அலுவலரிடம் வாழ்த்து பெற்றார்

image

பெரம்பலூர் மாவட்ட மைய நூலகத்தில் படித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் கு. பிரேமா என்பவர் தேர்ச்சி பெற்று அரசு பணியில் சேர்ந்துள்ளார். இவர் நேற்று பெரம்பலூர் மாவட்ட நூலக அலுவலரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட மைய நூலகத்தின் சார்பாகவும் நூலக அலுவலரின் சார்பாகவும், மாவட்ட நூலக அலுவலர் மற்றும் மாவட்ட மைய நூலகர்கள், அலுவலக பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 9, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

ஆண்டுதோறும் சுற்றுலாத்துறையால் , சுற்றுலாத் தொழிலை ஊக்குவிப்பதற்காக சுற்றுலா தொழில் முனைவோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது . அதனடிப்படையில்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-24 ஆம் ஆண்டின் சுற்றுலா விருதிற்க்கான விண்ணப்பங்கள் www.tntourismaward.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து 20.08.2024-க்குள் பதிவு செய்யும்படி கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வருகிற செப்டம்பர் (ம) அக்டோபர் மாதங்களில் 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட மண்டல (ம) மாநில அளவில் நடைபெற உள்ளது எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்கள் sdat.tn.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்திட வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் 7401703516 என்ற எண்ணில் தொடரலாம் என கலெக்டர் இன்று தகவல்.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்புப் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், அம்மாபாளையம், எறையூர், பெருமத்தூர், கூத்தூர் ஆகிய கிராமத்தில் 10.08.2024 நடைபெற உள்ளது.
என ஆட்சியர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் HCL நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (B.Sc Computing Designing), (B.Com, BCA & BBA) படித்திட விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 276317 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது பெரம்பலூர், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தையோ அணுகி உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என ஆட்சியர் அறிவிப்பு.

News August 8, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!