Perambalur

News August 11, 2024

பெரம்பலூரில் 8ஆம் ஆண்டு விதைத் திருவிழா

image

பெரம்பலூரில் 8ஆம் ஆண்டு விதைத் திருவிழா மாவட்ட இயற்கை உழவர் குழு சார்பில் ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை வளாகத்தில் நடைபெற்றது. நாட்டு விதைகள், நெல் விதைகள், சிறுதானியங்கள், உணவு மூலிகைகள் போன்ற பல்வேறு விதமானமான வகையான படைப்புகள் காட்சியளிக்கப்பட்டன. சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் ஆர்வமுடன் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.

News August 11, 2024

பொன்னகரம் கிராமத்தில் சாலை மறியல்

image

குன்னம் அருகே உள்ள பொன்னகரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த மயான பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி போடுவதால் 100க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 11, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மிக கனமழை

image

தமிழ்நாட்டில் இன்று கோவை, நீலகிரி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையும் இதே நிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

போக்குவரத்து துறை அமைச்சர் சுற்றறிக்கை

image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தொலைதூர புற நகர் ( சென்னை, கடலூர், வேலூர் போன்றவை உட்பட ) பேருந்துகள் முக்கியமாக இரவு நேரங்களில் துறைமங்கலம் வழியாக இயக்கப்படவில்லை என்று புகார் எழுந்தது. மேலும், துறைமங்கலம் வழியாக இயக்க வேண்டும், தவறும் ஓட்டுநர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

News August 10, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 5 பிரிவுகளின் கீழ் மாவட்ட மண்டல, மாநில அளவில் நடைபெற உள்ளது. மாணவர்கள், பொதுப் பிரிவினருக்கும், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க 25-ம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 10, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை

image

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 32 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 10, 2024

பெரம்பலூர் பிரபல ஹோட்டலில் தரமில்லா உணவு இளைஞர் குற்றச்சாட்டு

image

பெரம்பலூர் முரளிதரன் என்ற இளைஞர் நேற்று தனியார் ஹோட்டலில் வாங்கிய ஆப்பம் தரம் இல்லாமல் இருப்பதாகவும், தரமற்ற உணவுகளை தரும் இது போன்ற உணவகங்களை பெரம்பலூர் உணவு கட்டுப்பாட்டு துறை கண்டு காணாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து கடையின் முதலாளியிடம் கேட்டால் மெத்தன போக்காக பதில் கூறுகிறார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

News August 10, 2024

சுதந்திர தின கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய 4 ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆகஸ்ட் 15 அன்று காலை 11 மணியளவில் சுதந்திர தின விழா கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறும் என்றும், ஊராட்சி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல் அறிவித்துள்ளார்.

News August 9, 2024

பெரம்பலூர் ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-24ஆம் ஆண்டின் சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tntourismaward.com என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, தகுந்த ஆவணங்களுடன் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

தமிழ் புதல்வன் திட்டம் தொடக்க விழா

image

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக்கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற தமிழ்ப்புதல்வன் திட்ட தொடக்க விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 3,278 மாணவர்கள் பயன்பெற உள்ளார்கள்.இந்நிகழ்வின் போது கலெக்டர் மற்றும் எம் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!