Perambalur

News April 17, 2024

பெரம்பலூர் தொகுதியில் ₹1 லட்சம் பறிமுதல்

image

திருச்சி, லால்குடி அருகே ஐஜேகே கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ₹1 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறக்கும் படையினர் வருவதை அறிந்து வீட்டின் கழிவறையில் பணத்தை பதுக்கியுள்ளார் வினோத்சந்திரன். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 16, 2024

வேப்பந்தட்டை: ரூ.3,30,000 ரொக்கம் பறிமுதல்

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடி – மரவநத்தம் பிரிவு பகுதியில் தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.16) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி, பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்த கொளஞ்சி என்பவர் எடுத்து வந்த ரூ.3,30,000 ரொக்கத்தை தேர்தல் தணிக்கை குழுவினர் கைப்பற்றினர்.

News April 16, 2024

முயல் வேட்டை திருவிழா எச்சரிக்கை

image

பெரம்பலூா் மாவட்டத்தில் சித்திரை மாதத்தில் முயல் வேட்டை திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். முயல் வேட்டையாடுவது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்கு உரிய குற்றமாகும். வனத்துறையினா் கிராமங்கள் தோறும் தற்போது ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனா். முயல் வேட்டையில் ஈடுபடுவோா் கண்டறியப்பட்டால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவா் என மாவட்ட வனஅலுவலா் குகனேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்

News April 15, 2024

பெரம்பலூர் : வனத்துறையினர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் இரண்டு சிறுத்தைகள் புகுந்துள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவுடன் பொய்யான செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது.
இது தவறான தகவலாகும். இது போன்று பொதுமக்களை பீதிக்குள்ளாக்கும் வகையிலான செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் இரா.குகனேஷ் தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுத்தை..?

image

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை
பெரம்பலூர் மாவட்ட எல்லையான குன்னம் வட்டம், வயலப்பாடி பகுதியில் சிறுத்தை காலடி தடம் இருப்பதாக இன்று தகவல் வந்ததையடுத்து, பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் கு.கனேஷ் தலைமையில், அப்பகுதியில் கூண்டு மற்றும்
தெர்மல் ட்ரோன் கேமரா வைத்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதனால் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

News April 14, 2024

சீமான் தீவிர பிரச்சாரம்

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை, துறையூர், நம்பர்1 டோல்கேட் ஆகிய பகுதிகளில் (மைக்) ஒலிவாங்கி சின்னத்திற்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் கட்சியின் பெரம்பலூர் நிர்வாகிகள் தொண்டர்களுடன் கலந்து கொண்டனர். 

News April 13, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் மழை

image

தென் தமிழகபகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (7மணி வரை) பெரம்பலூர் மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News April 13, 2024

பெரம்பலூரில் இன்று முக்கிய தலைவர்கள் பிரச்சாரம்

image

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் இன்று(13.4.24) அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், நாம் தமிழர் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

News April 12, 2024

கலெக்டர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

image

பெரம்பலூர்: அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழியினை கலெக்டர் க.கற்பகம் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் ந.சிவா உட்பட பலர் உடனிருந்தனர்.

News April 12, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.