India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அந்த மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் ஆக.29 ம் தேதி நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் பெரம்பலூர் நகர் பகுதிகளான புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை மதனகோபாலபுரம், துறைமங்கலம் மின் நகர், அரணாரை, செங்குணம், எளம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தகவல் அளித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பெரம்பலூர் பகுதியில் உள்ளவர்கள் திருச்சி காவேரி ஆறு பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் விநாயகர் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நகர சுற்றியுள்ள பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிந்த நாராயணன் என்ற நபருக்கு விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பின் காவல்துறையினர் அவரது உறவினருக்கு தகவல் கொடுத்து இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி காலை 10:30 மணியளவில் காலெக்ட்ர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண்மை கடன் உதவிகள், எந்திரங்கள் மற்றும் நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம், என்று மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அருகே தேவையூர் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்திபெற்ற மகாமாரியம்மன் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஆக 9ஆம் தேதி பூச்சொரிதலோடு தேர்திருவிழா தொடங்கி, கடந்த 15ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி ஊர்வலம், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் ஊர்வலம் ஊர் பொதுமக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர்.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி, குளித்தலை தோகமலை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறச் செய்த மக்களை நேரில் சந்தித்து நேற்று நன்றி தெரிவித்தார். இதில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ர.மாணிக்கம், தோகமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் G. அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் குரும்பலூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் ஷேக் முகமது (29), 3 ஆண்டுகளாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். கோவையில் வருகிற 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை நடைபெறும் இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாட ஷேக் முகமது தேர்வாகி உள்ளார். இதற்கு முன்பு விஸ்வகுடியை சேர்ந்த ரமேஷ் (26) என்பவர் ஏற்கனவே தேர்வாகி, துணைத்தலைவராக உள்ளார்.
2024 ஆம் ஆண்டின் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு 25-08-24 அன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கால அவகாசம் 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https:sdat.tn.gov..in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அருகில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் அல்லது உதவி ஆய்வாளர்கள் நிலையில் உள்ள காவலர்கள் மருத்துவமனைகளில் சென்று பணிபுரிபவர்களின் பாதுகாப்பு தொடர்பான குறைகளை கேட்டறிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.