India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூா் மாவட்டத்தில் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட தேனி மாவட்டம், உத்தமபாளையம் உலகத் தேவா் தெருவைச் சோ்ந்த மதன் (29), பாலா (28), மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த தெய்வம் மகன் அஜீத் (27), பிரதீபன் மகன் வெள்ளையன் பிரபு (27) ஆகியோரை குண்டா் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
பெரம்பலூர் மாவட்டத்தில் காரில் கஞ்சா கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மதன், பாலா, அஜித், பிரதீபன் வெள்ளையன் பிரபு ,ஆகிய நான்கு நபர்கள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ் பி பரிந்துரை செய்தார், பரிந்துரை ஏற்ற மாவட்ட ஆட்சியர் குற்றவாளிகளை கொண்ட தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (ஆக 30)நேற்று மாலை 3.30 மணி அளவில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் செயல்பாடு (ம) பராமரிப்பு குறித்த முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, வேளாண்மை துறை இணை இயக்குனர் கீதா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் அசோக்குமார், உதவி செயற்பொறியாளர் சிவபிரகாஷ், வேளாண்மை பொறியியல் துறை அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்வி கடன் முகாம், செப். 3ம் தேதி தனலட்சுமி ஸ்ரீனிவாசன் கல்லூரியிலும், செப்-5ம் தேதி ரோவர் கல்லூரியிலும், செப்-10ம் தேதி ராமகிருஷ்ணா கல்லூரியிலும், முகாம் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9442271994 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாணவர்கள் முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட சுற்றுப்பகுதியில் நேற்று மழை பெய்தது. அதன்படி பெரம்பலூர், எறையூர், கிருஷ்ணாபுரம், வி.களத்தூர், தழுதாழை, வேப்பந்தட்டை, லப்பைகுடிகாடு, பாடாலூர், செட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்துள்ளது. சராசரியாக இதன் மொத்த அளவு 151.8 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஆங்கிலத் துறை தலைவருமான முனைவர் மூர்த்தி சாகித்ய அகாடமியின் செயலாளர் அஸ்வினி குமார் சித்ரா மிஸ்ராவின் ‘ Feet in the Vally ‘ நாவலை மொழி பெயர்த்தற்காக இவ்விருது வழங்கப்பட உள்ளது. பேராசிரியருக்கு எழுத்தாளர்களும் நண்பர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நடமாடும் கால்நடை மருத்துவ சேவையின் ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று பார்வையிட்டு ஓட்டுநர்களிடம் சாவியை வழங்கினர். கால்நடை அவசர உதவிக்கு 1962 என்னை தொடர்பு கொள்ளவும். பெரம்பலூர் மாவட்டத்திற்கு இரண்டு கால்நடை வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கீழப்புலியூர், கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. பட்டா பெயர் மாற்றுவதறகாக குன்னம் தாலுகா அலுவலகத்தில் 2 ஆண்டுகளாக அலைந்து வருகிறார். இதுகுறித்து மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நிலஅளவையர், வட்ட துணை ஆய்வாளர், தாசில்தார் ஆகிய 3பேர் மீதும் புகார் அளித்தார். ரூ.10 ஆயிரம் நிவாரணத்தொகையும், ரூ.10 ஆயிரம் வழக்கு செலவுத்தொகையும், அளிக்க வேண்டும் என்றும் அவரின் நிலத்தை அளக்கவும் உத்தரவிட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா தலைமையில் ஆகஸ்ட் 28ஆம் தேதியான இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் மாவட்ட எஸ் பி பொதுமக்களிடம் மனுவை பெற்றார். இம்முகாம் மூலம் 35 மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தொடங்கப்பட்டு நகர்புர மற்றும் பேரூராட்சி பகுதியில் 8 முகாம்கள் நடத்தப்பட்டது. முகாமில் 5264 மனுக்கள் பெறப்பட்டு 3893 மனுக்கள் ஏற்கப்பட்டது. அரசு விதிமுறைகளை உட்படாத 1371மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முகாமின் வாயிலாக 3893 பயன்பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.