India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்- 2, 2ஏ தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த வகுப்புகள் காலை 10.30மணி முதல் மாலை 1.30வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும். இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
பெரம்பலூர் ஒன்றியத்துக்குட்பட்ட வடக்கு மாதவி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி அருகில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் பெரம்பலூர் காவல் நிலைய காவல் துறை பொதுமக்களுடன் இணைந்து நடத்தும் சமுதாய நல்லுறவு விழிப்புணர்வு முகாம் இன்று மாலை நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல்துறை அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 132.85 லட்சம் மதிப்பீட்டில் வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட, அயன் பேரையூர் முதல் தைக்கால் வரை அமைக்கப்பட்டு வரும் தார் சாலையின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று 05.10.2024 நேரில் ஆய்வு செய்தார்.இந்நிகழ்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூரில் – 7 மி.மீ, எறையூர் 31 மி.மீ, கிருஷ்ணாபுரம் 23 மி.மீ, வி.களத்தூர் 17 மி.மீ , தழுதாழை 17 மி.மீ, வேப்பந்தட்டை 23 மி.மீ, அகரம் சீகூர் 12 மி.மீ, லப்பைகுடி காடு 11 மி.மீ, புதுவேட்டைகுடி 22 மி.மீ, பாடாலூர் 2 மி.மீ, செட்டிகுளம் 2 மி.மீ மழை பெய்துள்ளது இதன் மொத்த அளவு 158 மி.மீ மழை பெய்தது, மாவட்டத்தில் சராசரியாக 14.36 மி.மீ மழை பெய்துள்ளது என மா.நிர்வாகம் இன்று தகவல.
இன்றும் 04-10-2024 தமிழ்நாட்டில் 15க்கும் மேற்பட்ட துணைக்கருவிகள் ,முதன்மைக்கல்விஅலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிய திருமதி மு.முருகாம்பாள் அவர்கள் பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியிட மாற்றம்செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர்மாவட்டத்தில் பணியாற்றிய திரு சுகானந்தம் அவர்கள் கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் TNPSC Group 2, 2A தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 7/10/24 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் அறிவித்துள்ளார். இவ்வகுப்பானது அனைத்து வேலை நாட்களிலும் நடைபெறும் என்றும், படித்த வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்திட 31.12.2024 அன்று வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி மாநகராட்சி அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் (www.tamilvalar chithurai.tn.gov.in) விண்ணப்பிக்கலாம் நிறைவு செய்த விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் 31.10.2024 அளிக்கப்பட வேண்டும் என கலெக்டர் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
லட்சத்தீவு அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்று பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 7:30 மணி வரை கனமழை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலத்தூர் வட்டம் எலந்தலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் வேலவன் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவரை பெரம்பலூர் ஸ்பெஷல் டீம் உதவியாளர் பார்த்திபன் பழனிவேலு தலைமையில் காவலர்கள் தயாளன் ஆகியோர் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.