Perambalur

News October 8, 2024

ஆசிரியா் பயிற்றுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

image

நிலுவையிலுள்ள ஊதியம் வழங்க வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பகுதிநேர சிறப்பாசிரியா்கள் சங்கம் மற்றும் ஆசிரியா் பயிற்றுநா் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் குணசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாரதிதாசன், மாவட்ட மகளிா் அணிச் செயலா் வஹிதா பானு, ஒன்றியத் தலைவா் கு. தேவகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

News October 8, 2024

பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமையச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக எஸ்.எஸ். சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

image

மாணவர்களிடையே போதைப் பொருட்கள் பயன்பாடு உள்ளதா என்பதை கண்காணித்தல் தொடர்பாக அனைத்து கல்லூரிகளின் முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா முன்னிலையில் இன்று நடைபெற்றது பள்ளி (ம) கல்லூரிகளில் மாணவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துகின்றார்களா என்பது குறித்து ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

News October 7, 2024

நாட்டுரக கோழிகள் வளர்க்க பெண்களுக்கு மானியம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 400 ஆதரவற்ற ஏழைபெண்கள், விதவை மற்றும் உடல் ஊனமுற்ற பெண்கள் ஆகியோருக்கு நாட்டு கோழிக்குஞ்சுகள் 50 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஷ் பச்சாவ் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் பயனடைய விருப்பமுள்ள நபர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் சென்று விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

நகரும் நியாய விலைக்கடை துவக்கம்

image

குன்னம் வட்டம் பெரியவெண்மணி ஊராட்சிக்குட்பட்ட புதுக்குடிசை கிராமத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூட்டுறவுத்துறையின் சார்பில் நகரும் நியாய விலைக்கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தலைவர் வீ.ஜெகதீசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News October 7, 2024

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் Way2News நிறுவனத்தின் ‘மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ ஆக பணிபுரிய ஆட்களை தேர்வு செய்ய உள்ளோம். 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 9965860996, 9962082912, 9791731249 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளவும்.

News October 7, 2024

கோயில் உண்டியல் பணத்தை திருடியவர் கைது

image

அடைக்கம்பட்டி கிராமத்தில் ஆவுடையான் கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் அண்மையில் திருடி சென்றனர். இதுகுறித்து கோவில் பூசாரி பாடாலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் பூலாம்பாடியை சேர்ந்த நாகராஜ் (24) என்பவர் தான் கோவில் உண்டியல் பணத்தை திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News October 7, 2024

காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி

image

பெரம்பலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் புகுந்த காதல் ஜோடி காவல்துறை விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கபிரியோஸ் -திவ்யா என்பது தெரியவந்தது. பெங்களூர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர். பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்தனர். அரும்பாவூர் முருகன் கோயிலில் திருமணம் செய்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

News October 6, 2024

பெரம்பலூர் பெண்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நிலையில் உள்ள, கணவனை இழந்த கைவிடப்பட்ட, ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்ற பெண்களுக்கு, கோழிக்குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்டுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய தகுதியுள்ள பயனாளிகள் அருகாமையிலுள்ள கால்நடை மருந்தகங்களில் உரிய விபரங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

வேப்பந்தட்டையில் வாலிபர் தற்கொலை

image

வேப்பந்தட்டையை சேர்ந்த கிருஷ்ணகாந்த் வக்கீலுக்கு படித்துள்ளார். இவரது தாய் தந்தை இருவரும் இறந்துள்ளதால், தனியாக மன உளைச்சலில் கிருஷ்ணகாந்த் இருந்துள்ளார். இதில் நேற்று அவரது சகோதரி போன் செய்த போது எடுக்காததால் வீட்டின் அருகே இருந்தவர்கள் சென்று பார்த்தபோது கிருஷ்ணகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!