Perambalur

News September 30, 2024

துணை முதல்வருக்கு எம்பி அருண் நேரு வாழ்த்து

image

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்பி அருண் நேரு நேற்று துணை முதலமைச்சராக பதவி ஏற்று கொண்ட உதயநிதி ஸ்டாலினை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்து துணை முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டதற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். உடன் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு இருந்தார்.

News September 30, 2024

பெரம்பலூா் மாவட்டத்தில் ரூ.104 கோடி இழப்பீடு

image

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல் குறித்த செயல்விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் ட்ரோன் செயல் விளக்கத்தை பாா்வையிட்டு, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் 34 ஆயிரத்து 506 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளப் பயிா்களுக்கு காப்பீடு செய்த 32000 விவசாயிகளுக்கு ரூ. 104.44 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

News September 29, 2024

பெரம்பலூ மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் வட்டம், சத்திரமனை கிராமத்தில் அக்டோபர் 9-ந்தேதி மாவட்ட ஆட்சியரின் தலைமையில்,மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. அதற்காக கோரிக்கை மனுக்கள் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, சத்திரமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை சத்திரமனை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 29, 2024

பெரம்பலூர்: தொழில் முனைவோர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

அரசால் நடத்தப்படும் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்கம் 1 ஆண்டு சான்றிதழ் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெரம்பலூர் ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, ஈடிஐஐ-டிஎன், தொழில் முனைவோா் சான்றிதழ் படிப்பை தொடங்க உள்ளது. இந்த வகுப்பில் பங்கேற்க ரூ. 80,000 கட்டணம் செலுத்த வேண்டும். 21 முதல் 40 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும்.

News September 28, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

முதலமைச்சர் கோப்பைக்காக மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் இன்று காலை 10.15 மணிக்கு பரிசுகளை வழங்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 28, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பாட்டிற்காக நெல் 75.074 மெ.டன்கள் இருப்பில் உள்ளது. சிறுதானியங்களில் 3.574 மெ.டன்கள் இருப்பும், பயறு வகைகளில் 7.612 மெ.டன்கள் இருப்பும், எண்ணெய்வித்து பயிர்களில் 19.240 மெ.டன்கள் இருப்பும், மாவட்டத்தில் தற்சமயம் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

News September 27, 2024

பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

image

வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ரங்கராஜ் என்பவரை விசாரணை செய்தபோது அவர் பள்ளி குழந்தைகளுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.500 மதிப்புள்ள 100 கிராம் அளவுள்ள 10 பொட்டலங்களை ( தலா 10 கிராம் )பறிமுதல் செய்த அரும்பாவூர் காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News September 27, 2024

பெரம்பலூரில் விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (27.09.2024) நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு முன்பு டிரோன் மூலம் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் குறித்த செயல்விளக்கம், மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. விவசாயிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

News September 27, 2024

பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட பசுமைக்குழு கூட்டம்

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் வனத்துறை மற்றும் பிற துறை அலுவலர்களுடனான மாவட்ட பசுமைக்குழுக்கூட்டம் இன்று (27.09.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் வனத்துறை மற்றும் பிற துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News September 27, 2024

கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.

error: Content is protected !!