India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருகாலத்தில் தமிழகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்த ‘பெரும்புலியூர்’ தான் இன்று ‘பெரம்பலூர்’ ஆக மாறியுள்ளது. எங்கும் வனப்பகுதியாக இருந்த பெரம்பலூர் புலிகளும், சிறுத்தைகளும், கரடிகளும் வாழ்ந்த இடமாகும். அதுமட்டுமின்றி அழகிய மலைகளும், மலைகள் சூழ்ந்த பகுதிகளும் இங்கு நிறைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பெரம்பலூர் என்ற பெயரும் வந்ததாக கூறப்படுகிறது. ஷேர் செய்யவும்
ஆலத்தூர், நக்கசேலம் கிராமத்தைச் சேர்ந்த அய்யம்பெருமாள் தனது நிலத்தில் பட்டு வளர்ச்சி துறை ஆலோசனைப்படி 3000 மல்பெரி செடிகளை நட்டு, பயிர்களுக்கு இலவச காப்பீடு செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தார். இதனிடையே மல்பெரி பயிர்கள் மழையினால் சேதம் அடைந்தன. ஆனால் பட்டு வளர்ச்சித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து விவசாயிகளுக்கு ரூ.50,000 இழப்பீடு நுகர்வோர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவர், நேற்று வீட்டில் இருந்தபோது, கொம்புகள் அறுக்கப்பட்ட நிலையில் மான் ஒன்று இவரது வீட்டிற்குள் புகுந்து பதுங்கியுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர் அதை பிடித்து பத்திரமாக கட்டி வைத்து, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம அளவில் கொம்புகளின்றி காயமடைந்திருந்த மானை, வனத்துறையினர் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலுார் அடுத்த ஆடுதுறை அரசு பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வந்த மருத்துவ குழுவினரால் தடுப்பூசி போடப்பட்டது. அன்று, அர்ஜூன் என்ற மாணவனுக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கத்துடன் புண் ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த, 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார். SHAREIT & COMMENTIT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கலெக்டருக்கு கோரிக்கை மனுக்களை வழங்கினர். பின்னர் வருவாய்த்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.3,00,000 மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.3,97,740 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே ஒளியெழுப்பும் பட்டாசுகளை வெடிக்க, நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. அதனை மக்கள் கடைபிடிக்க வேண்டியும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் மாசில்லாத தீபாவளியை கொண்டாட பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT
பெரம்பலூரில் போக்குவரத்து காவலர்கள் வாகன தணிக்கை செய்த போது இளம் சிறார் ஒருவர் வாகனம் ஓட்டியுள்ளார். இதையடுத்து அவரின் பெற்றோர்களை வரவழைத்து, சிறார் வாகனத்தை இயக்கினால் 25 ஆயிரம் அபராதம், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் அறிவுரை வழங்கினர். மேலும் சிறார்கள் வாகனம் இயக்கினால் பெற்றோருக்கு தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். SHAREIT
பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துவார்கள். அது போல திருநாளில் மாசற்ற தீபாவளியாக பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவுத் தூணிற்கு காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.