India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்வரின் புதிய திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் உதவி வழங்கப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதி வாய்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற exwel.schemes.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04329 – 221011 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
DEO அலுவலகத்தில் வருகின்ற சனிக்கிழமை (08/02/2025) ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம், கூட்டத்தில் பள்ளி வளாகத்தில் ஏற்படுகின்ற சவால்கள், மாணவர்களுடைய கல்வி கற்பதில் உள்ள சவால்கள், பள்ளியின் அடிப்படைத் தேவைகள், கழிவறை சுத்தம் குறித்து கேட்டறிந்து தீர்வு காணப்படும்.
பெரம்பலூரில் அட்வகேட் அசோசியேட் அமைப்பைச் சேர்ந்த வக்கீல்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், 3-வது நாளாக இன்றும் கோர்ட்டு பணி புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டம் காரணமாக பெரம்பலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், குன்னம் வேப்பந்தட்டை கோர்ட்டுகளில் வழக்குகள் விசாரணை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நேற்று (பிப்.4) அரணாரை, அரும்பாவூர், பெரியம்மாபாளையம், லப்பைகுடிகாடு, நல்லறிக்கை போன்ற கிராமங்களில் உள்ள மளிகை கடைகளில் நடத்திய சோதனையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, 5 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கைகளத்தூர், ஈச்சங்காடு ஆகிய துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (பிப்.05) நடைபெற உள்ளது. ஆகவே அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர், அதனாக்குறிச்சி, மாத்தூர், தூலார் மைன்ஸ், சிலுப்பனூர் ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 9.00 மணி முதல் 2:00 வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it now…
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற 28.02.2025 தேதிக்குள் umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் அடுத்த புதுநடுவலூர் கிராமத்தில் 12.02.2025 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே புதுநடுவலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை புதுநடுவலூர் கிராம நிருவாக அலுவலகத்தில் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞர்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் நேற்று (பிப்.03) தொடங்கியது. இதில் வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.120 ஆகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை திரும்பப் பெற வழக்குரைஞர்கள் செலுத்தும் ரூ.20 முத்திரைக் கட்டணத்தை, ரூ.100 ஆகவும் உயர்த்திய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பஸ்கள் இயக்க புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீட்டராக இருக்க வேண்டும். குறைந்த பட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது போன்ற வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.