India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வரும் 16.11.2024 (சனிக்கிழமை). 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) 23.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை ஆகிய விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கிரேஸ் பச்சாவ் இன்று அறிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகின்ற (15-11-2024) வெள்ளிக்கிழமை அன்று கழக நிகழ்ச்சியில் திமுக கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்வதையொட்டி, பெரம்பலூரில் உள்ள திருமணம் மண்டபத்தில் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நவம்பர் 12ஆம் தேதியான இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெங்கலம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலையை சனிக்கிழமை இரவு மர்ம நபர் கையை உடைத்துள்ளார். இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள அம்பேத்கர் கிராம பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் அரும்பாவூர் காவல் துறையினர் விசாரணையில் அப்பகுதியைச் சேர்ந்த கிரிதாஸ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் முன்னாள் படை வீரர் (ம) சார்ந்தோர்களுக்கான பாதுகாப்பு ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் 14.11.2024 அன்று தஞ்சாவூரில் நடைபெற உள்ளது. இம்முகாம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள ராமசாமி திருமண மண்டபத்தில் 14.11.2014 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இதில் விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் இன்று தகவல் அளித்துள்ளார்.
மேட்டூர் மற்றும் பெரியசாமி கோவில் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரபெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம், அய்யனார்பாளையம், பெருநில, வெள்ளுவாடி, நெற்குணம், நூத்தப்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (நவ.11) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின்வாரிய அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் குமரன் என்பவர் தனக்குச் சொந்தமான மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்காபோன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரியவந்த நிலையில், தனிப்படையின் குழுவினர் மேற்படி அவரை கைதுசெய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று பார்வையிட்டார். இத்தேர்விற்கு 823 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 514 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதி உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.