Perambalur

News November 6, 2024

பெரம்பலூர்: மருத்துவ மதிப்பீட்டு முகாம் 

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை (ம) சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 18 வயதிற்கு குறைவான மாற்றுத் திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் 55 மாற்றுத்திறனாளி குழந்தைகள் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்தனர்.

News November 6, 2024

சிறப்பு மனு முகாமில் 44 மனுக்கள் பெறப்பட்டன

image

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த மனு முகாமில் கலந்து கொண்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றார். இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 44 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

News November 6, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள வரவேற்பு அறையில் வைக்கப்பட்டுள்ள போதையில்லா பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பதாகையில் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா நேற்று போதை ‘எனக்கு வேண்டாம்’ நமக்கும் வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News November 6, 2024

தவெகவில் இணைந்த பிற கட்சி உறுப்பினர்கள்.

image

பெரம்பலூரில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் 50க்கும் மேற்பட்ட பிற கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், தமிழக வெற்றிக்கழக பெரம்பலூர் மாவட்ட தொண்டரணி மாவட்ட தலைவர் கருணா தலைமையில் தங்களை தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இன்னும் சில தினங்களில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பலரும் இணைவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News November 6, 2024

செங்கனம் அருகே விபத்தில் இளைஞர் பலி

image

பெரம்பலூர் வட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்குணம் கைகாட்டி தென். பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு ஒருவர் கிழக்கில் இருந்து மேற்காக சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணையில் இறந்தவர் வேப்பந்தட்டை வட்டம், நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் (37() என்பது தெரியவந்தது.

News November 6, 2024

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அத்தியூர் (ம) பெரியவெண்மணி கிராமத்தில் உள்ள நியாய விலை கடை கட்டிடத்தினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் இன்று  திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து துங்கபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டி நிறுத்துமிடம் கழிவறை கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 5, 2024

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு போலீசார் விசாரணை

image

பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை ராஷினிநகரை சேர்ந்த சாதிக் பாட்ஷா இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சர்மிளா 3 பிள்ளைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.  வீட்டை பூட்டிவிட்டு விருத்தாசலத்திற்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 81/2 பவுனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

பெரம்பலூர் எம்எல்ஏ கோரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் இடம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி கண்டிப்பாக வேண்டும் என்று பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். கோரிக்கை ஏற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

News November 5, 2024

அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

image

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரை ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவம்பர் 5-ஆம் தேதியான இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

News November 5, 2024

பெரம்பலூர் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

வேப்பந்தட்டை அருகே உள்ள நெய்குப்பை கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி. இவரது மகன் ஊமைத்துரை இன்று வயலில் உள்ள மின்சார பெட்டியில் உள்ள சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த வ.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!