India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்திய “புத்துளிர் 2024” மாநில அளவிலான போட்டியில் முதலிடம் பெற்ற பெரம்பலூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசிரியர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதால் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை துறை அலுவலகத்திலும், http:/dsdcpimms.tn.gov.in இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT,IIM,IIIT,NIT மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த இன (BC,MBC,DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான உதவித் தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது பெற தகுதியான நபர்கள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றிதழ்களுடன் 29.11.2024 க்குள் மாவட்ட ஆட்சியரகம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து பயனடைய வேண்டுமென கலெக்டர் நேற்று தகவல் அளித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நேற்று (18.11.2024) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் 306 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் 20.11.2024 அன்று நடைபெறவுள்ளது. எனவே கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் (ம) தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2000க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறந்த பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள நகராட்சி அல்லது வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் கலெக்டர் அறிவித்துள்ளார். SHARE IT.
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரப்படி பெரம்பலூர் 11 மி.மீ, எறையூர் 2 மி.மீ, கிருஷ்ணாபுரம் 5 மி.மீ, வி.களத்தூர் 9 மி.மீ, தழுதாழை 18 மி.மீ, வேப்பந்தட்டை 30 மி.மீ, அகரம்சீகூர் 5 மி.மீ, பாடாலூர் 9 மி.மீ, செட்டிகுளம் 11 மி.மீ. மழை பெய்துள்ளது. இதன் மொத்த அளவு 102 மி.மீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 9.27 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இன்று தகவல் வெளியிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் 19.11.2024 அன்று மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான கேடயத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சீராநத்தம் ஊ. ஒ. தொ.பள்ளி தலைமை ஆசிரியர் திருமாவளவன், உதவி ஆசிரியர் ராமசாமி, ஆலத்தூர் வட்டார கல்வி அலுவலர் சின்னசாமி ஆகியோரிடம் வழங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் விருது பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சீராநத்தம் பள்ளி ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.