India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1- 2025 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முதன்மைத் தேர்விற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதால் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயில www.tahdco.com இணையத்தில் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 04328 276317 எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் எம்.ஜி.ஆர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனருந்தனர்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் செப்.,13ஆம் தேதி திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் சிவகுமார் பெரம்பலூர் தொகுதி மற்றும் குன்னம் தொகுதிக்கு பொறுப்பாளர்களை நியமித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி, எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் அறிய 04328 276317 என்ற எண்ணில் அழைக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE NOW.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கே கலெக்டர் சென்று கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்களை பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரம்பலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க <

பெரம்பலூர் மின்கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மின்வாரிய கோட்ட, மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் 9.9.2025 நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது . இந்த கூட்டத்தில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகள் , குறைகளை நேரில் முறையிட்டு பயன்பெறலாம் என
பெரம்பலூர் மின்கோட்ட செயற்பொறியாளர் அசோக் குமார் தகவல்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் இங்கே <

பெரம்பலூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

பெரம்பலூரில் உள்ள SBI லைஃப் இன்சூரன்ஸில் அட்வைசராக பணிபுரியும் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் தனது நண்பரான செந்தில்குமார் (45) என்பவர் ஒரு அறக்கட்டளைத் திட்டத்தைத் தொடங்கப் போவதாகவும், அதில் அதிக லாபம் ஈட்டுவதாகவும் என ஆசை வார்த்தை கூறி ரூ.88,28,900 பணத்தை ஏமாற்றியதாக மாவட்ட குற்றப் பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் செந்தில்குமாரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.