India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூர் மக்களே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உங்கள் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மகளிர் உரிமை தொகை, மருத்துவ காப்பீடு, முதியோர் தொகை போன்ற சேவைகளை எளிய முறையில் பெற முடியும். நமது பெரம்பலூர் மாவட்டத்தில் முகாம் நடைபெறும் இடங்கள்
இன்று 11.09.2025
✅வேப்பந்தட்டை ( வாளிகண்டாபுரம்)
✅வேப்பூர்( திருமாந்துறை)
நாளை 12.09.2025
✅ஆலந்தூர்( கீழுமாத்தூர்)
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம், களரம்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அம்மாபாளையம் ராஜம்மாள் பரவாசு திருமண மண்டபத்திலும், ஆலத்தூர் வட்டம் மேலமாத்தூர், இலந்தங்குழி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு மேலமாத்தூர் ஆனந்த் மஹாலிலும் (10.09.2025) நடைபெற்றது.
இதில் அம்மாபாளையத்தில் நடந்த முகாமினை கலெக்டர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரேவதி (35) என்பவர் தனது தாயுடன் சோழப் பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை தனது இடது காலால் மிதித்ததில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று (செப்.10) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <

இன்று திட்டக்குடி, வயலப்பாடி, புதுவேட்டக்குடி, துங்கபுரம், அரியலூர், கீழப்பழூர், திருமானூர், திருவையாறு வழியாக தஞ்சாவூர் வரை செல்லும் புதிய அரசு போக்குவரத்து கழக பேருந்து வசதியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன் அவர்களுடன் சிறுபாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் புதிய பேருந்து சேவையை துவங்கி வைத்தார்.

பெரம்பலூர் ஒன்றியம், இலாடபுரம் ஊராட்சியில், ரூபாய் 5.00 கோடி மதிப்பீட்டில் இலாடபுரம் பிரிவு சாலை மேம்பாடு மற்றும் பாலம் கட்டும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 40.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, மற்றும்அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 43.00 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவங்கி வைத்தார்.

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூட்ட அரங்கில், மாநில அளவிலான அடைவுத்தோ்வு 2025 குறித்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுடனான ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்: மாணவர்களின் கற்றலை ஆசிரியர் மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடைபெற உள்ளதால் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம் உட்பட நகர பகுதி முழுவதும் சிட்கோ ,காவலர் குடியிருப்பு, இந்திரா நகர், அருமடல், அருமடல் பிரிவு, எளம்பலூர், மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை காலை 9:45 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி 12 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயனடைந்த திருநங்கைகள் தங்களுது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.