Perambalur

News November 3, 2025

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

image

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்
➡️ஆதனூர் கைலாசநாதர் கோயில்
➡️அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
➡️அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
➡️அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
➡️கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
➡️இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
➡️இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
➡️கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
➡️காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்க!

News November 3, 2025

பெரம்பலூரில் சோழன் ஏரி தெரியுமா?

image

ராஜேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்க ‘சோழகங்கம் ஏரி’ என்ற ஏரியை வெட்டியதாக வரலாறு கூறுகிறது. இந்த ஏரிக்காக கொள்ளிடத்திலிருந்து அறுபதுகல் தொலைவிற்கு கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடம் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும் கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்த நிலையில் உள்ளதாக கூறுகின்றனர். உங்களுக்கு தெரிந்ததை கமெண்ட் பண்ணுங்க!

News November 3, 2025

பெரம்பலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

பெரம்பலூர்: சவுதி அரேபியாவில் பணிபுரிய வாய்ப்பு

image

சவுதி அரேபியாவில், 2026-ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு சேவையாற்ற, மாநில ஹஜ் ஆய்வாளர்களாகத் தற்காலிகமாக பணிபுரிய, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

இதில் பெரம்பலூர் மாவட்டம் தான் முதலிடம்

image

நெல், நிலக்கடலை, கரும்பு, சோளம், சின்ன வெங்காயம் மற்றும் முந்திரி முதலியவை பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள் ஆகும். இதில் முக்கியமாக தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் மொத்த சிறிய வெங்காய உற்பத்தியில் 24% பெரம்பலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News November 3, 2025

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000 – ரூ.2,20,000
3 கல்வித் தகுதி: B.E., B.Tech., CA., CMA., MBA.,
4. வயது வரம்பு: 45 வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…

News November 3, 2025

பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

image

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.

▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!

News November 3, 2025

பெரம்பலூர் ரேசன் பொருட்கள் நேரடி விநியோகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் இன்று (நவ.03) முதல் நவ.5-ம் தேதி வரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைத் தாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

இல்லதிற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் இன்று (நவ.03) முதல் 5ம் தேதி வரை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெறும் குடும்ப அட்டைத் தாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

பெரம்பலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக் <<>>செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!