India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள கோயில்களின் உண்டியல் காணிக்கை என்னும் பணி அறநிலை துறை ஆய்வாளர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது. பணியில் கோவில் நிர்வாகிகள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட 35 பேர் பங்கேற்றனர். உண்டியலில் காணிக்கை ரூ6,18,860 ரொக்கமும் 5 கிராம் தங்கமும், 273 கிராம் வெள்ளியும் இதுவரை காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெரம்பலூர் போலீசார் ஓர் தனியார் கல்லூரியின் அருகிலுள்ள பேருந்து நிலையத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கவுல்பாளையம் பிரபு (19), பெரம்பலூர் பிரவீன் (19) மற்றும் ஒரு சிறுவன் என 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <இங்கே க்ளிக் செய்யவும்> பதிவு செய்யவும். இதன் மூலம் உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுவது மட்டுமில்லாமல் கூடுதல் வருவாய் ஈட்டவும், இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும். மேலும் விவரங்களுக்கு +91 8466022122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரி எனும் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.63,87,620 ஏமாற்றிய வடமாநில குற்றவாளிகள் 2 பேரை பெரம்பலூர் சைபர் குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் குற்றவாளிகள் வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மக்கள் இதுபோன்ற ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம் (30). இதேபோல தெரணி நடுத்தெருவை சேர்ந்தவர் சன்னாசி (55). வெவ்வேறு உடல்நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்ட இருவரும் மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நேற்று ஒரு நாளில் ஒரே ஊரை சேர்ந்த இருவர் தற்கொலை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இன்று சித்தளி பேருந்துநிலையத்திற்கு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை ஆன்லைனில் விற்றுக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 செல்போன், லாட்டரி நம்பர் எழுதிய சீட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி ராஜேந்திரனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு ஊர்தி ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து ஆட்சியரிடம் மனு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் மதுக் குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 40 டூவீலர்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் வரும் டிச.30 அன்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காலை 10 மணிக்கு அரசு நிா்ணயித்த விலையில் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் டிச. 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் முன் அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ளலாம். செய்தியை ஷேர் செய்யவும்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வரும் டிச.27ஆம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், கடன் உதவிகள், மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை தாலுகாவிற்குட்பட்ட விசுவக்குடி நீர்தேக்க அணையினை இன்று (23.12.2024) திமுக துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பியுமான இராசா நேரில் சென்று பார்வையிட்டார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.