Perambalur

News November 10, 2024

மளிகை கடையில் போதைப்பொருட்கள் விற்பனை: போலீசார் அதிரடி

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் குமரன் என்பவர் தனக்குச் சொந்தமான  மளிகை கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்காபோன்ற போதைப்பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரியவந்த நிலையில், தனிப்படையின் குழுவினர் மேற்படி அவரை கைதுசெய்து குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News November 10, 2024

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தேர்வு

image

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. தந்தை ஹேன்ஸ் ரோவர் பள்ளியில் நடைபெற்ற தேர்வை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று பார்வையிட்டார். இத்தேர்விற்கு 823 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 514 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 10, 2024

பெரம்பலூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

தனியார் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தகுதி உள்ள நபர்கள் கலந்து கொண்டு பயன்பெற அழைப்பு விடுத்துள்ளார்.

News November 10, 2024

பெரம்பலூரில் கஞ்சா விற்றவர் கைது

image

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பாடாலூர் போலீசார் ரோந்து சென்றனர். பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே டூ வீலரில் நின்று கொண்டிருந்த பார்த்திபன் (20) என்ற நபரை விசாரணை செய்தபோது அதில் 100 கிராம் அளவுள்ள கஞ்சா பொட்டலத்தை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. தொடர்ந்து பார்த்திபனை கைது செய்து அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News November 9, 2024

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தனியார்துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் “வேலைவாய்ப்பு முகாம்” பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3ஆம் வெள்ளிக்கிழமை நடைப்பெற்று வருகிறது. அதனடிப்படையில் இம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 15.11.2024 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 9, 2024

100 நாள் வேலைத்திட்டத்தில் ரூ‌.34 லட்சம் மோசடி

image

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற மோசடிகள் குறித்து மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் தணிக்கைக் குழு நடத்திய ஆய்வின் படி, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சுமார் ரூ.34 லட்சம் மோசடி நடந்ததை வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, சம்பந்தபட்ட பணியாளரை பணியிடை நீக்கம் செய்து, அரும்பாவூர் போலீசில் புகாரையடுத்து வழக்குப் பதிவு செய்து முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

image

குன்னம் தாலுகாவிற்குட்பட்ட, முருக்கன்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (09.11.2024) மாற்றத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்றது .இந்நிகழ்வில் துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

News November 9, 2024

போலீசிடம் பொய் புகார் – செக் வைத்த போலீஸ்

image

பெரம்பலூரில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனது வாகனத்தை மறித்து ஓட்டுனரை தாக்கி விட்டு ரூ.10 லட்சம் பணத்தை திருடி சென்றதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்தார். இந்நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News November 9, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில்
கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் இலவச தடுப்பூசி 11.11.2024 முதல் 30.11.2024 வரை இலவசமாக கால்நடை மருந்தகங்களில் செலுத்தி பயன்பெறலாம். ஆடு வளர்க்கும் விவசாயிகள் உரிய விபரம் அளித்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்

News November 9, 2024

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனிநபர் இல்லத்தில் நூலகத்தினை பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் தங்களது நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை அறிய நூல்கள் ஏதாவது இருப்பின் அதன் விபரம் எந்த ஆண்டு முதல் நூலகம் பராமரிக்கப்பட்டு வருகிறது என்ற விவரம் (ம) தங்களது பெயர் முகவரி கைபேசி எண்ணுடன் 20ஆம் தேதிக்குள் பெரம்பலூர் மாவட்ட நூலகத்திற்கு நேரில் அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்.