India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக மினி பஸ்கள் இயக்க புதிய விரிவான திட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீட்டராக இருக்க வேண்டும். குறைந்த பட்ச சேவை செய்யப்படாத பாதை நீளம் சாலையின் மொத்த பாதை நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது போன்ற வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு தலைமையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, மாற்று திறனாளிகள் உதவித்தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 237 மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நாளை (பிப்.04) 9 மற்றும்10ஆம் வகுப்புகளுக்கும்; நாளை மறுநாள் (பி.05) 11 மற்றும்12-ஆம் வகுப்புகளுக்கும் என்ன உயர் கல்வி படிக்கலாம் என்பது குறித்து பல்வேறு நுணுக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன.
பெரம்பலூர் நகர மின்வாரிய அலுவலகத்தில் மின்னிணைப்புகள் பெருகிவிட்டதால், நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு, துறைமங்கலம் எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்ட மின் இணைப்புகள் துறைமங்கலம் பிரிவுக்கு கீழ் வருவதால் அந்தப் பகுதி மின் நுகர்வோர்களின் மின்னிணைப்பு எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மின்வாரிய செயற்பொறியாளா் அசோக்குமாா் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வெள்ளாற்றில் மணல் கடத்தபடுவதாக குன்னம் காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின்படி, போலீசார், ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரெட்டிக்குடிகாடு அருகே வெள்ளாற்றிலிருந்து மாட்டு வண்டியில் மணல் ஏற்றிவந்த பாண்டுரங்கன் (46), சூர்யா (24) என்பவர்கள், அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மாட்டு வண்டியோடு மணலை பறிமுதல் செய்த போலீசார் அவர்களையும் கைது செய்தனர்.
தவெக 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழக மாவட்ட தொண்டர் அணி தலைவர் K.கர்ணா தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பேசுகையில் ஒரு ஆண்டு காலமாக கட்சியின் செயல்பாடுகள் மற்றும் 2026ஆம் ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
பெரம்பலூர்- வடக்குமாதவி சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் மக்காசோளத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மறைமுக ஏலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். மேலும் விவரங்களுக்கு ,பெரம்பலூா் விற்பனைக்குழு மேற்பாா்வையாளரை 93613-89690, 79040-43838 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (ஜன 31) இரவு 9 வது புத்தக கண்காட்சியை தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் துவக்கி வைத்தார்கள். பின்பு அமைச்சர்கள் மற்றும் பெரம்பலூர் ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், எஸ்பி ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் சிறைவாசிகளுக்காக புத்தகதான பெட்டியில் புத்தக தானம் செய்தார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பண்பாட்டு இயக்கம் சார்பில் நடத்தப்படும் புத்தக கண்காட்சியை இன்று (31-01-2025) தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சா சி சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தார்கள். நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் எம் பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குன்னம் தாலுகா, கீழப்பெரம்பலூர் ஊராட்சியில் ,இன்று (31.01.2025) ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 3-ஆம் கட்ட சிறப்பு முகாமினை, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன்,போக்குவரத்து துறை அமைச்சரும்,குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.