India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று (ஜன.24) நடைபெற்றது. இதில், ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளார். ஹெல்மெட் போடுங்க பரிச வாங்குங்க
மனிதநேய வார விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சி இன்று (24.01.2025 ) மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது துறைசார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் மனிதநேய வார விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அரசு திட்டங்கள் குறித்த கண்காட்சியை (24-01-2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து நேரில் பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா, மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கண்ணப்பாடி கிராமத்தில் அமைந்துள்ள இரண்டு வெவ்வேறு மாரியம்மன் கோயில்களிலும் மற்றும் புது அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலிலும் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தற்போது பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர்களுக்கு ஜன.29-ம் தேதியும், மருந்தாளுநர்களுக்கு பிப்.4-ம் தேதியும் ஆட்சேர்ப்பு முகாம் கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தை அனுகலாம். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லக்ஷ்மி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (23.01.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய விமானப்படையால் நடத்தப்படவுள்ள அக்னிவீர் வாயு தேர்விற்கான ஆட்சேர்ப்பு முகாம் 28.01.2025 முதல் 06.02.2025 வரை, கேரள மாநிலம், கொச்சி,எர்ணாகுளத்தில் நடைபெறவுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு http://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக அறியலாம்.விமானப்படையில் பணியாற்ற விரும்பும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜமீன் பேரையூர், தெரணி மற்றும் கொட்டரை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக பேருந்து வழி தடங்களை நீட்டிப்பு செய்து, கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரம்பலூர்- குரும்பபாளையம் நகரப் பேருந்து கொட்டாரை, ஆதனூர் வரை நீட்டிப்பு செய்தும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து சேவை நேற்று தொடங்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.