India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் ஜெயராஜ் என்பவர் நேற்று இரவு 9 மணியளவில் தெற்கு இருங்களூர் கோவில் திருவிழாவில் சீரியல் லைட் சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பெரம்பலூர் அடுத்த வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. அவரது மகன் கவுதம்(15) அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையில் இருந்த இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள வயலில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி வயலில் இருந்த கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை மீட்ட கை.களத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரில் ரஞ்சன்குடி கோட்டை என்று அழைக்கப்படும் நஞ்சன்கொடி கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டை கி.பி 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் 1751ல் பிரிட்டிஸ் மற்றும் பிரஞ்ச் படைகளுக்கு இடையே நடைபெற்ற வாலிகொண்டா போரின் முக்கிய காட்சியாக உள்ளது. கோட்டையானது சுரங்கப்பாதை, சிறைச்சாலை, பீரங்கிமேடை மூன்றடுக்கு பாதுகாப்பு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. SHARE IT.
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் TNPSC குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க..
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சிவாலாயத்தில் 18 மாதத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் இன்று மாலை 4.20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இத்தலத்தில் வழிபட்டால் ராகு தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்க!
பெரம்பலூர் மாவட்டம்,லாடபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் – பிரியா தம்பதி இவர்களுக்கு குழந்தை இல்லை,சரவணணுக்கு சொந்தாமான வயலில் உள்ள ஓட்டு வீட்டில் சரவணன் – பிரியா இருவரும் நேற்று தூங்கியுள்ளனர்,தூங்கிக்கொண்டிருந்த பிரியாவின் காலில் பாம்பு கடித்துள்ளது,பிரியா பாம்பு கடித்தது குறித்து சரவணணிடம் தெரிவிக்க பிரியா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
11,12 வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் கட்டுரை, பேச்சுப்போட்டி மே 9,10 தேதியில் நடைபெறுகிறது,போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை https://tamilvalarchithurai.in.gov.inபதிவிறக்கம் செய்து பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் முதல்வரிடமும் பரிந்துரைக்கடிதத்துடனும் 05.05.2025 நாளுக்குள் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ <
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ <
பெரம்பலூரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஏப்.25) காலை 10 மணிக்கு நடக்கிறது முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை கல்வி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யவுள்ளனர்,10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த வேலை வாய்ப்பற்ற ஆண், பெண் முகாமில் கலந்து கொள்ளலாம்.SHAREIT
Sorry, no posts matched your criteria.