India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மாவட்ட சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், “கோர்ட்டு உத்தரவின்படி பொது இடங்களில் அனுமதியில்லாமல், நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை 2 வாரத்திற்குள் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை வருவாய்த்துறை அலுவலர்கள் போலீசாருடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் (19) என்பவர் நேற்று முன்தினம் இரவு தனது பைக்கில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பி விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்த அப்துல்கலாம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் ஆகிய பிரிவுகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <
பொது சுகாதார துறை அறிவுறுத்தலின்படி கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் கோடை காலத்தில் பொதுமக்கள்,தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அணிந்து வேலை செய்ய வேண்டுமென ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
உலக தண்ணீர் தினமான 22.3.2025 அன்று நடைபெறவிருந்த கிராம சபை கூட்டம் தமிழ்நாடு அரசின் நிர்வாக காரணங்களால் 29. 3.2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் 29.3.2025 அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை சீனிவாசன் பல்கலைக்கழகத்தின், பொறியியல் கல்லூரியில் “என் கல்லூரிக் கனவு” ஆலோசனை முகாம் நடைபெறவுள்ளது என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தார். இதனை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் SHARE பண்ணுங்க..
கோடைகாலத்தில் பொதுமக்கள் வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொது சுகாதாரம் (ம) நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டும் கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும் பொழுது உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. பொதுமக்கள் அதிக அளவில் மோர், இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை சாறு, ORS கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும் என கலெக்டர் தகவல்.
பெரம்பலூர் மாவட்டம், கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக மருவத்தூர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் மணிகண்டன் (29) என்பவருக்கு 30வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளை திருச்சி மாவட்டம் பறவைகள் பூங்கா, அண்ணா அறிவியல் கோளரங்கம், வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு ஒரு நாள் சுற்றுலாவிற்காக நேற்று (24.3.2025) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் வழி அனுப்பி வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து மாவட்ட ஆட்சியர் கிரேஸ் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூரில் (மார்ச்.25) உரிய தேதிகளில் ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்கக் கோரி தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று திங்கட்கிழமை காலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.