Perambalur

News October 20, 2025

பெரம்பலூர்: தீபாவளி ஒளி பொங்க இந்த கடவுளை வழிபடுங்கள்!

image

பெரம்பலூர் மாவ்ட்டம் துறையூர் சாலை கல்யாண் நகரில் ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் அமைந்துள்ளது. விநாயகர் அனைத்து காரியங்களின் தொடக்கமாகவும், அனைத்து விஷயங்களிலும் தடையற்ற முன்னேற்றத்திற்கான தெய்வமாகவும் கருதப்படுவது ஐதீகம். தீபாவளி அன்று விநாயகரை வழிபடுவதன் மூலம், எல்லாம் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வீட்டிலும் விநாயகரை வழிபடலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 20, 2025

பெரம்பலூர்: மின்தடை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டம் எசனை, கிருஷ்ணாபுரம், சிறுவாச்சூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (22-10-2025) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் இணைப்பு பெறும் பகுதிகளில் அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மின்தடை ஏற்படும் என துணை மின் செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News October 20, 2025

பெரம்பலூர் மாவட்ட முக்கிய ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்கள் விற்கும் நபர்கள் குறித்த தகவலை தருவதற்கு <>Drug Free Tamil Nadu<<>> என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து தங்களது பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் புகார் தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

பெரம்பலூர்: மின்சார உதவி எண் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றன. மழையின் காரணமாக ஆங்காங்கே உள்ள மின்கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்தும் காணப்பட்டால் எச்சரிக்கையுடன் அதை கையாண்டு தொடாமல் மின்சாரத் துறையின் கட்டணமில்லா (9498794987) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

பெரம்பலூர்: கரண்ட் கட்டா? ஒரு Phone போதும்!

image

பெரம்பலூர் மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

பெரம்பலூர்: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

 பெரம்பலூர் வட்டம் சென்னை – திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி அருகில் நேற்று (18.10.2025) இரவு இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், காயம் அடைந்த ஒருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியில் பரிதாபமான உயிரிழந்தார்.

News October 19, 2025

பெரம்பலூரில் இப்படியான இடங்களா!

image

1. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் – சிலப்பதிகாரக் காவிய நாயகி கண்ணகி வரலாற்றுடன் தொடர்புபடுத்தி இங்கு அம்மனின் வரலாறு செவிவழிச் செய்தியாய்க் கூறப்பட்டு வருகிறது.
2.சாத்தனூர் கல்மரம்: சாத்தனூர் கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படுகிறது.
3. ரஞ்சன்குடி கோட்டை: இக்கோட்டை நஞ்சன்குடி கோட்டை என்றும் குறிப்பிடலாம். 1751ஆம் ஆண்டு நடைபெற்ற வாலிகொண்டா போரின் பிரதிபலிப்பாக அமைந்துள்ளது.

News October 19, 2025

பெரம்பலூர்: மழை பாதிப்புக்கு இதை தெரிஞ்சிக்கோங்க!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநில உதவி – 1070, மாவட்ட உதவி – 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் கட்டயாம் உதவும். இதனை Save பண்ணிக்கோங்க.

News October 19, 2025

பெரம்பலூர்: விவசாயிகளுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயலில் வேலை செய்யும் விவசாயிகள் இடி, மின்னல், மழை நேரங்களில் வயலில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் மிருணாளினி எச்சரித்துள்ளார்.

News October 19, 2025

பெரம்பலூர்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வருகிற அக்.24ம் ஆம் தேதி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன விற்பானி அலுவலகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!