India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் ஆட்சியரகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வி. களத்துார் சேர்ந்த மாரியம்மாள் என்பவர் தனது 9 வயதான கவினேஷ் என்ற மாற்றுத்திறனாளி மகனுக்கு காதொலிக்கருவி கேட்டு கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையினை பரிசீலனை செய்த கலெக்டர் காதொலிக்கருவி வழங்க அலுவலருக்கு உத்தரவிட்டார். 10 நிமிடத்தில் தனது குழந்தைக்கு காதொலிக்கருவி வழங்கிய ஆட்சியருக்கு மாரியம்மாள் நன்றி தெரிவித்தார்.
‘பெரும்புலியூர்’ என்று அழைக்கப்படும் பெரம்பலூர் மாவட்டம் புலி, சிறுத்தை, கரடி வாழ்ந்த வனப்பகுதியாக காணப்பட்ட இடமாகும். அதுமட்டுமின்றி ‘லாடபுரம்’ என்ற பகுதியில் பஞ்சபாண்டவர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல உங்க ஊரில் உள்ள வேறு ஏதேனும் சிறப்புகள் இருந்தால் அதை கமெண்ட் பண்ணுங்க, தெரியாதவர்களுக்கு உங்க ஊர் பெருமையை SHARE பண்ணுங்க..
பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 5 கோயில்கள்:
*வாலீஸ்வரர் கோயில் (வாலிகண்டபுரம்)
*ஏகாம்பரேஸ்வரர் கோயில் (செட்டிகுளம்)
*குற்றம் பொருந்தவர் கோயில் (எஸ். ஆடுதுறை)
*செட்டிகுளம் பலதண்டாயுதபாணி கோயில்
*மதனகோபாலசுவாமி கோயில் (பெரம்பலூர்)
‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கி கடன் உதவி வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க
முருகனை வேலுடன் கண்டிருப்பீர்கள் ஆனால் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் என்ற ஊரில் முருகப்பெருமான் கையில் கரும்பு ஏந்திய கோலத்தில் காட்சியளிக்கிறார். இவரை கண்ணாரக்கண்டு தரிசிப்பவர்களின் வாழ்க்கை இனிமை மிகுந்ததாக அமையும். மேலும் இனிமையான வாழ்க்கைத் துணை அமைவார்கள் என்ற ஐதிகம் உள்ளது. கல்யாணத்திற்கு பெண்/பையன் தேடும் உங்களுக்கு தெரிந்தவர்களை இந்த கோயில் குறித்து SHARE பண்ணுங்க…
இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வேறு பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. உங்க ஊர் பெருமைய SHARE பண்ணுங்க..
பெரம்பலூர் நெடுவாசல் பிரிவு சாலை அருகே மினி பஸ் மீது கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து 4 பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்: (22.03.2025)மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்பெரம்பலூர்: மாவட்டத்தில் 10. அரசு மகளிர் விடுதிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு மிஷின், கலெக்டர் வழங்கினார்
தாட்கோ மற்றும் சென்னை பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் இதர வகுப்பின் மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற பிளஸ் 2 பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்குப் பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரும்பாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.