Perambalur

News March 18, 2024

பெரம்பலூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு

image

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். வாக்கு எண்ணும் மைத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான க.கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளாதேவி ஆகியோர் இன்று(மார்ச் 17) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News March 16, 2024

பெரம்பலூர்: பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

image

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா இன்று மங்கள வாத்தியம் முழங்க, பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜ், முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன் உட்பட பலர் செய்திருந்தனர்.

News March 16, 2024

பெரம்பலூர்: நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

image

பெரம்பலூர் வட்டம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாம்பாடி எனும் குக்கிராமம் பெரம்பலூருக்கு மிக அருகில் இருந்தபோதிலும், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்கும் மேலாக இக்கிராமத்திற்கு அரசு போக்குவரத்து வழித் தடம் இல்லை. இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று(மார்ச் 16) பாலாம்பாடி கிராமத்தில் இருந்து பெரம்பலூருக்கு புதிய போக்குவரத்து வழித்தடத்தை எம்எல்ஏ பிரபாகரன் தொடங்கி வைத்தார்.

News March 16, 2024

பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு

image

பெரம்பலூர் அடுத்த எளம்பலூர், கவுல்பாளையம் ஆலாம்பாடி, நொச்சியம் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து ஒரு சில பகுதிகளை பெரம்பலூரில் இணைத்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேற்று(மார்ச் 15) எளம்பலூர் ஊராட்சி தலைவர் சித்ராதேவி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News March 16, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37 . கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!