India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண் நேரு , 13ஆவது சுற்று முடிவில்.தி.மு.க.வேட்பாளர் கே.என்.அருண்நேரு – 390601, அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரமோகன் – 138823, ஐ.ஜே.கே.(பா.ஜ.க.)வேட்பாளர் பாரிவேந்தர் – 105124 வாக்குகள் பெற்றுள்ளனர். 51778 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கே.என்.அருண்நேரு 13- வது சுற்றில் முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 11 சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அருண் நேரு 3,26,167, வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 1,15,586 வாக்கு பெற்றுள்ளார். இதில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் அருண் நேரு 2,10, 581 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூரில் 9-ஆவது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் அருண் நேரு – 30,964 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் அதிமுக 10,534 ஓட்டுகளும், பாஜக கூட்டணி( ஐஜேகே)- 8669 ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நாதக- 5959 ஓட்டுகள் பெற்று நான்காவது இடத்திலும் உள்ளது.
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி தனியார் பள்ளியில் எண்ணப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போதைய எட்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இதில், திமுக (அருண்நேரு) – 29576 , அதிமுக (சந்திரமோகன்) – , 11468, பாஜக (பாரிவேந்தர்) 7932, நாதக (தேன்மொழி) – 5764 வாக்குகள் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக 4, 43,394 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. தொடர்ந்து திமுக வேட்பாளர் அருண்நேரு முன்னிலை வகித்து வருகின்றார்
பெரம்பலூர் எண்ணிக்கை மையத்தை பார்வையிட வந்த அருண் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, முதல்வரின் உழைப்புக்கும் , திட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. பெரம்பலூர் மாவட்டத்திற்க்கு ரயில் வசதி கொண்டு வருவேன் என தெரிவித்தார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் அருண் நேரு 30,026 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 10,691 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். ஐஜேகே 8331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 5,308 வாக்குகள் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் தற்போது வரை அருண் நேரு முன்னிலை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட பாரிவேந்தருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாரிவேந்தர் 8,331 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர் பின்னடைவில் இருப்பது பாஜக கூட்டணிக்கு பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் 4வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், திமுக வேட்பாளர் அருண் நேரு 1,18,062 வாக்குகள் பெற்று 79,742 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 38,320 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் பாரிவேந்தர் 32,030 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக வேட்பாளர் தேன்மொழி 22,294 வாக்குகள் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியின் இரண்டாம் சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் அருண் நேரு முன்னிலை வகித்து வருகிறார். இரண்டாம் சுற்றில் திமுக வேட்பாளர் அருண் நேரு 29340 வாக்குகள் பெற்றுள்ளார்.அவர் சுமார் 19,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.அதிமுக வேட்பாளர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தொகுதியில் முதல் சுற்று நிலவரம் வெளியாகியுள்ளது. முதல் சுற்று நிலவரப்படி, திமுக (அருண்நேரு) – 29726 வாக்குகள், அதிமுக(சந்திரமோகன்)- 10464 வாக்குகள், பாஜக- (பாரிவேந்தர்) -7927 வாக்குகள், நாதக(தேன்மொழி) – 5691 வாக்குகள் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக – 55596 வாக்குகள் முதல் சுற்று நிலவரப்படி எண்ணப்பட்டுள்ளன .
Sorry, no posts matched your criteria.