India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அருண் நேரு இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அருண் நேரு, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, போதை இல்லா தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட தேமுதிக சார்பில் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு தேமுதிக மாவட்டச் செயலாளர் துரை. சிவா ஐயப்பன் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும், வருகின்ற ஜூன் 30 ஆம் தேதியன்று 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் அறிவுறுத்தியுள்ளார்.
பெரம்பலூர்: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் அறிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 416 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28ஆம் தேதி கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர் பாசனம் வேளாண்மை கடனுதவிகள் வேளாண்மை இடு பொருட்கள் (ம) விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும், விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் கற்பகம் இன்று தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்: தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயனடையும் வகையில் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளது. இதில் விருப்பமுள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாகவோ அல்லது www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், அரசு போக்குவரத்து கழக பணிமனை வாயில் முன்பு, அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சங்கம் (சிஐடியு) சார்பில் சங்கத்தின் கிளைச் செயலாளர் அறிவழகன் தலைமையில் இன் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் முன்பு அதிமுக கட்சியின் சார்பில் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் செய்து கோசம் எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செங்குணம் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு செங்குணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ப.தனராசு ஏற்பாட்டில் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனை இரத்த வங்கி பிரிவில் அரியலூர் மாவட்டம், ஏலாக்குறிசசியை சேர்ந்த, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் கலைவாணன் முதன் முதலாக இரத்தம் தானம் செய்து உதவினார்.
Sorry, no posts matched your criteria.