Perambalur

News July 11, 2024

விருது பெற ஆட்சியர் அழைப்பு

image

தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த்தொண்டினை ஊக்கப்படுத்தி தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்களை www.tamilvalarchithurai.com இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து விவரங்களை நிரப்பி தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆக.08 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக வாகனங்கள் ஏலம்

image

பெரம்பலூர் மாவட்டக் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 17-இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் 2-நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 19-வாகனங்கள் வருகின்ற ஜூலை-13 ஆம் தேதி காலை 10-மணியளவில் பெரம்பலூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9498159193, 9498158918 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் ராஜினாமா

image

பெரம்பலூரில் சிட்டிங் எம்பியான இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டு 1,61,866 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.  இந்நிலையில் அக்கட்சியில் பொதுச்செயலாளராக இருந்த ஜெயசீலன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஐஜேகே தோல்வி அடைந்ததற்கு முழு பொறுப்பேற்று  பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

News July 10, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட சிறப்பு முகாம் நாளை(ஜூலை.11) முதல் செப்.14 வரை நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக சிறுவாச்சூர், புதுநடுவலூர், வேலூர் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மின்சார வாரியம், கூட்டுறவு, சுகாதாரம் உள்ளிட்ட 15 துறைகளில் வழங்கப்படும் 45 சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

பயிர் காப்பீடு; ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் காரீப் பருவத்துக்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் ஷீமா ஜெனரல் காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் காரீப் பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்ய உரிய சான்றிதகளுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 8, 2024

ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு தோல்வி, தேர்ச்சி (ம) அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவினை தொடர்ந்து புதுப்பித்து 30.6.2024 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. எனவே தகுதி உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தகவல்.

News July 7, 2024

பெரம்பலூர்: மக்களுடன் முதல்வர் திட்டம்

image

பெரம்பலூர் ஒன்றியத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்  (ஜூலை -11 சிறுவாச்சூர்), (ஜூலை-16 அம்மாப்பாளையம் ) ,(ஜூலை-18 செஞ்சேரி), (ஜூலை-19 எசனை), (ஜூலை- 23 கவுள்பாளையம்), (ஜூலை-24 மேலப்புலியூர்) ஆகிய பகுதிகளில் காலை-10 மணிமுதல் மாலை-3 மணிவரை நடைபெறவுள்ளது. பகுதிகளுக்குட்பட்ட சுற்றுவட்டாரப் கிராமப் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார்.

News July 7, 2024

பெரம்பலூர்: மக்களோடு மக்களாக கலெக்டர்

image

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தின் கீழ் பாலக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் கலெக்டர் கற்பகம் மக்களோடு மக்களாக
இன்று (ஜூலை-07) நடைபயிற்சியில் பங்கேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பிரதாப்குமார், து. கா.கண்காணிப்பாளர் வளவன், அரசு மருத்துவர்கள் த.அரவிந்த் , சேசு மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

News July 6, 2024

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகளான ஆதனூர், நத்தக்காடு அயன்பேரையூர் உட்பட 11 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேலும் விவரங்களுக்கு  ஆட்சியர் அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

News July 6, 2024

விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

பெரம்பலூர்: சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது தமிழக முதலமைச்சரால் துணிச்சலான மற்றும் வீர தீர சாகசச் செயல் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது 2024ம் ஆண்டிற்கு வழங்கப்பட இருக்கிறது. தகுதியானவர்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) 08/07/2024 அன்று மாலைக்குள் ஆன்லைனில் பதிவுடுமாறு கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!